வேழம் பட ரேட்டிங்: 3/5
புதுவிதமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அசோக் செல்வன் இந்த முறை “வேழம்” என்னும் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு உள்ளார் அவர்கள் இத்திரைப்படத்தை விமர்சனத்தை பார்ப்போம்.
தனிமையில் வாழும் ஹீரோ அசோக் செல்வன், ஒரு கட்டத்தில் அவரது காதலி ஐஸ்வர்யா மேனன் சைக்கோ கொலைகாரர்களால் கொலை செய்யப்படுகிறார். அவரை எதற்காக கொலை செய்தார்கள். கொலை செய்த நபர் யார் என்ற கோணத்தில் செல்லும் ஒரு சைக்கோ கில்லர் கதைதான் இது.
ஒரு சைக்கோ கில்லர் கதை அல்லது கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் கதைக்களத்தில், திரைக்கதை முடிந்தவரை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் மேக்கிங் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த மேக்கிங்கிற்கு ஏற்றாற்போல் திரைக்கதையும் நம்பும்படி எந்தவித லாஜிக் மீறல்களும் இல்லாமல் முடிந்த அளவு நேர்த்தியாக அமைய வேண்டும். அந்த வகையில் கதையில் ஒரு சில இடங்களில் சிறிய லாஜிக் மீறல் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த வேழம் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும்.
இது போன்ற படங்களில் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் நம்பி தான் முழு கதையும் நகரும். அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மக்கள் எதிர்பார்க்காத வகையில் இருந்துவிட்டால் படம் வெற்றி. இல்லை என்றால் தோல்வி. அதை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்பார்க்காத நேரத்தில் மிகப்பெரிய திருப்பத்தை படம் சந்திக்கும். அந்த நேரத்தில் இருந்து நாம் இதுவரை படத்தில் பார்த்தது எல்லாம் பொய் தானா என்று நம்முடைய எண்ணத்தை மாற்றும் அளவிற்கு இருக்கும்.
அது போன்ற ஒரு மேஜிக் இந்த கதையின் கிளைமாக்ஸ்க்கு இருக்கிறது. அதனால் இந்த படத்தை நிச்சயம் ஒருமுறை திரையரங்கில் போய் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. படத்தில் குறைகள் என்று சொன்னால் முதல் பாதியும் அதற்கான திரைக்கதையும் தான். முதல் பாதியில் கதையை செட் செய்து நகர்த்துவதற்கு கொஞ்சம் நேரம் எடுகிறார்கள். பின்பு கதை ஒரு இடத்தில் செட்டாகி விட்டதும், ஜெட் வேகத்தில் பறக்கிறது. ஆனால் முதல் பாதியில் மட்டும் நாம் கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் இரண்டாம் பாதி கண்டிப்பாக நம்மை பிரம்மிக்க வைக்கும். மற்றுமொரு நல்ல திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை இந்த “வேழம்” படம் உங்களுக்கு கொடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
“வேழம்” திரைப்படம் வெற்றியடைய kollywoodmix சார்பாக வாழ்த்துக்கள்.