சார்பில் சத்யராஜ் வழங்க சிபிராஜ் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ சத்யா “
இப்படத்தை “ சைத்தான் “ வெற்றி பட இயக்குநர் “ பிரதீப் கிருஷ்ணமூர்த்தி “ இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பிசீன்
வரலக்ஷ்மி , ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
. இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார். ரம்யாவுக்கு இப்படம் பெரிய பெயர் வாங்கி தரும். இப்படத்தை வர்தா புயல் வந்த அன்று கூட படமாக்கினோம். அன்று நாங்கள் அம்பத்தூரில் உள்ள ஒரு இடத்தில் செட் போட்டு படமக்கிக்கொண்டிருந்தோம் , புயல் அடித்த பின்பு தான் வெளியே வரமுடியும் என்பதால் நாங்கள் உள்ளேயே தான் இருந்தோம். புயல் வரப்போகிறது என்று தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய புயலாக இருக்கும் என்று தெரியாது. இந்த படம் மிக சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று நிச்சயமாக கூறமுடியும். எனக்கு கமர்ஷியல் திரைப்படம் எடுக்க தெரியாது என்று நினைத்து கொண்டிருந்தேன். படத்தை இப்போது பார்க்கும் போது இது என்னை ஊக்குவிக்கும் வகையில் வந்துள்ளது. படத்தின் கதை படி கிரைம் ஒன்று நடக்கும் , அப்படி அது நடக்கும் போது எப்போதும் அது போலீஸின் பார்வையில் செல்வது போல் தான் கதை இருக்கும். ஆனால் இந்த கதை சத்யா என்ற சாதாரணமான ஒரு நபரின் பார்வையில் செல்வது போல் இருக்கும். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பது வரை செல்லும் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும்.
நான் இன்னும் தயாரிப்பாளர் சிபிராஜை பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்ததை பொறுத்தவரை எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். முத்த காட்சி ஒன்றில் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு லிப் லாக் முத்த காட்சி தேவையானதாக இருந்தது , சிபிராஜிடம் நான் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் நடிக்க முடியாது சாரி என்று கூறிவிட்டார். நான் எவ்வளவோ அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அந்த லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்ததற்கான காரணம் “ அவருடைய மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது “ என்பதால் தான்.
சத்யா திரைப்படம் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசை
555
புகழ் சைமன்
, அவருடைய இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது என்றார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி.
