இதோ ஒரு புதிய தேசிய கீதம்!நம் நாடு சுதந்திரம் பெற்று 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கிறோம்.
https://youtu.be/GCsAOOlKvVM
நம் நாட்டின் தேசிய கீதம் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஒரு புதுமையான முறையில் புதுமையான பெருமையோடு இந்த தேசிய கீதத்தை ஒலிக்க வைத்து நாட்டுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் எச்.ஆனந்த் கிருபாகரன் .இவர் ஓர் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஒலிப்பதிவுப் பொறியாளர் ,கீபோர்டு வாசிப்பவர் மட்டுமல்ல இசை ஆசிரியரும் கூட.
அவர் பேசும்போது,
“நமது நாட்டில் நிலவும் துயரமான கொரோனா காலத்தை ஏராளமான பேரின் தியாகத்தாலும் உழைப்பாலும் சேவையாலும் நாம் பாதுகாப்பாகக் கடந்து கொண்டிருக்கிறோம்.கோவிட் தொற்று நோயாளிகளைக் காப்பாற்றப்போய் எத்தனையோ மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரை விட்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் களத்தில் நின்று போராடி வருகிறார்கள். இந்த காலகட்ட நெருக்கடியை மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள் , செவிலியர்கள், காவல்துறையினர்,தூய்மைப் பணியாளர்கள் இன்னும் எத்தனையோ சேவைப்பணியாளர்கள் தங்கள் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தன்னலம் கருதாத அந்த பொதுச்சேவை செய்தவர்களுக்கும் இதைச் செய்யும்போது உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் நாம் என்ன கைமாறு செய்திருக்கிறோம்? அவர்களை எப்படி நாம் முன்னெடுத்துப் போற்றியிருக்கிறோம்? அவர்களைப் உயர்த்தி பெருமைப்படுத்தவும் அங்கீகாரம் கொடுப்பதற்கும் என்ன செய்திருக்கிறோம் என்று யோசித்தபோது ஒரு தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும் ?என்று யோசித்தேன். இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடப்படும் தேசிய கீதத்தை புதுமையான முறையில் பாடி ஒலிப்பதிவு செய்து இந்திய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி 220 ஆசிரியப் பெருமக்களைக் கொண்டு பாட வைத்து தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டு தொகுத்து ஒரு பெரும் தொகுப்பாக இந்த தேசிய கீதத்தை உருவாக்கி முடித்தோம்.
இந்த முயற்சியைத் மக்களுக்காக ஓயாது உழைத்து வரும் தமிழக முதல்வருக்கும் களத்தில் பணியாற்றும் அத்தனை சேவையாளர்களுக்கும் நன்றியோடு சமர்ப்பணம் செய்கிறோம்”என்று கூறுகிறார் ஆனந்த் கிருபாகரன்.
அவர் இந்தப் பாடலுக்குரிய காட்சிகளுக்கு கருத்துருவாக்கம் செய்து உரிய இசை ஏற்பாடுகளைச் செய்து அருமையான முறையில் தொகுத்து படத்தொகுப்பு செய்து வெளியிட்டுள்ளார்.
பாடலுக்குக் கிடார் மற்றும் பேஸ் சாம்.கே .ஜெபராஜா, ட்ரம்பெட் – ராகேஷ், ரிதம் ப்ரோகிராமிங் டேவிட்சன் ராஜா, மிக்ஸிங் மாஸ்டர்டு எம். எஸ்.ஸ்ரீ காந்த், வீடியோ எடிட்டிங் ஏ.ஆர்.ஃப்ராங்க்.
இது ஒரு வணிக நோக்கில்லாத முயற்சியாகும்.
இந்தத் தேசிய கீதத்தைப் பரவச் செய்து நம்மை நாமே பெருமைப் படுத்திக் கொள்வோம்.இதோ ஒரு புதிய தேசிய கீதம்!
நம் நாடு சுதந்திரம் பெற்று 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கிறோம்.

இந்தத் தேசிய கீதத்தைப் பரவச் செய்து நம்மை நாமே பெருமைப் படுத்திக் கொள்வோம்.