full screen background image
Search
Tuesday 10 December 2024
  • :
  • :
Latest Update

PALAM SILKS exhibition on Fabric of dreams & Fashion Show held at The Folly, Amethyst on 5th May 2017.

கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை
பாலம் சில்க்சின் அசத்தல் கண்காட்சி
கலைவண்ணம் இழைந்தோடும் காஞ்சிப் பட்டின் புதிய பரிணாமம்
பாரம்பரிய பெருமையும், பட்டின் மென்மையும் ஒன்றுசேரும் ஒரே இடம், காஞ்சிபுரம்.  நாகரீகம் தழைத்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகெங்கும் தமிழக வணிகர்களால் கொண்டு செல்லப்பட்ட மிக முக்கியமான பொருள், காஞ்சி பட்டு. ரோமாபுரி, சீனம், யவனம் என பல நாடுகளுக்கும் பயணித்துள்ளது இந்த காஞ்சி பட்டு. இதற்கு சாட்சிகள் பல உண்டு.
இப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க பட்டின் மேன்மையை ஒட்டுமொத்த உலகுக்கும் பறைசாற்றும் விதமாக புத்தம் புதிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பாலம் சில்க்ஸ். கவினுறு வண்ணங்கள், கலையழகு மின்னும் வடிவங்கள், கோவில் நகராம் காஞ்சியின் பெயர் சொல்லும் சிற்பக்கலைகள் பொதிந்த டிசைன்கள் என காண கண்கோடி வேண்டும் என்று சொல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சிக்கு கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெண்ணும் வாழ்வின் மறக்கமுடியாத தருணங்களில் அணியக்கூடிய ஆடையாக இந்த பட்டு உள்ளது. நித்தம், நித்தம் கனவில் கண்டு ரசிக்கக்கூடிய அந்த பொன்னிற கனவுகளை நினைவுகூறும் விதமாகவே இந்த கண்காட்சிக்கு கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை என்று பெயர் சூட்டியுள்ளதாக கூறுகிறார் பாலம் சில்க்சின் உரிமையாளர் திருமதி.ஜெயஸ்ரீ ரவி.
இந்த கண்காட்சியில் காஞ்சிப்பட்டின் பாரம்பரிய ரகங்களான கெட்டி பார்டர் புடவைகள், பூ வேலைப்பாடு பார்டர் கொண்ட புடவைகள், வட்ட வட்ட பொட்டு வைத்த வண்ணமிகு புடவைகள், பழமையை விதந்தோதும் ஜரிகை டிசைன்கள், மணப்பெண்களுக்கே உரித்த வியத்தகு புடவைகள், வெள்ளிச்சரிகை மின்னும் ப்ளாட்டினம் வகை புடவைகள் என பல வண்ணங்களில் – பல டிசைன்களில் பட்டுப் புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் புதுமை என்னவென்றால், கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை என்ற இந்த கண்காட்சியில் மொத்தம் ஐம்பதே ஐம்பது தேர்வு செய்யப்பட்ட ரக புடவைகள் விற்பனைக்கு உள்ளது. இந்த புடவைகளின் ஒவ்வொரு இழையிலும், திருமதி.ஜெயஸ்ரீ ரவி அவர்களின் கற்பனையும் – கடும் உழைப்பும் ஒருங்கிணைந்துள்ளது.  காஞ்சிப்பட்டின் பாரம்பரியம், அதேவேளை நவயுக யுவதிகள் அணியும் வண்ணம் தேர்வு செய்யப்பட்ட வேலைப்பாடுகள், இதுவே இந்த கண்காட்சியின் சிறப்பம்சம்.
திருமணம் போன்ற சுபநிகழ்வுகளின் போது மட்டுமே பட்டுப்புடவைகள் அணிவது என்ற மக்களின் மனநிலையை மாற்ற ஆண்டுகள் பல பிடித்ததாக கூறுகிறார் பாலம் சில்க்ஸ் உரிமையாளர் திருமதி. ஜெயஸ்ரீ ரவி. ஆனால் தற்போது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் அணியத்தக்க வகையில் புதுப்புது பட்டுப்புடவை ரகங்களை தாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஏறத்தாழ ஆறுமாத கடும் உழைப்பிற்கு பிறகு கைத்தறிப்பட்டின் பாரம்பரியத்தையும், தற்போதைய காலகட்டத்தின் ஓவிய கலையழகையும் ஒருங்கிணைத்துள்ளதாகவும் திருமதி.ஜெயஸ்ரீ ரவி கூறியுள்ளார்.
தொட்டு உணர்ந்தால், அணிந்து மகிழத் தோன்றும் அட்டகாச பட்டுப் புடவைகள் அணிவகுத்து காத்து நிற்கிறது கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை கண்காட்சியில். அதுமட்டுமல்லாது, பண்டைய காலத்தில் எந்தெந்த வழித்தடங்களில் எல்லாம் பட்டு ஆடைகள் பயணித்தது என்பது குறித்த புகைப்பட கண்காட்சியும் இதில் உண்டு. பாலம் சில்க்சின் கலைஞர்களின் கைவண்ணத்தையும், கற்பனைத் திறனையும் காண இதைவிட்டால் வேறு இடம் இல்லை.
சென்னை ராயப்பேட்டையில் சத்யம் திரையரங்கு எதிரில் உள்ள அமெந்தியாஸ் அரங்கில் மே 5 முதல் 7-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு வந்து பாருங்கள், கனவின் துகிலின் மென்மையை உணர்ந்து பாருங்கள்..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *