full screen background image
Search
Thursday 23 January 2025
  • :
  • :

CAM BENEFIT TRUST சார்பில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்

CAM BENEFIT TRUST சார்பில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளையான CAM BENEFIT TRUST சார்பில் இன்று (24.11.2019) சென்னை ஜெமினி லேப்ரட்டரில் பொதுமக்கள், மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் துவங்கப்பட்டது. இந்த முகாம் இன்று 10 மணி முதல் மாலை 3 மணி வரை, நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாமை தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.பி.சி. ஶ்ரீராம், செயலாளர் திரு B.கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்துனர்களாக நடிகர் நாசர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை திருவள்ளூர் மாநில செயலாளர் கமீலா நாசர், நடிகை சாக்‌ஷி அகர்வால் மற்றும் பல பிரபல ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களும், திரைத்துறையினரும், கலந்து கொண்டு உரிய சிகிச்சை பெற்று பயனடைய இந்த மருத்துவ முகாமில் தலைசிறந்த மருத்துவக் குழுவினரால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *