சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு
‘KABADADAARI’
‘KABADADAARI’ Motion Poster Link
https://youtu.be/8mDxGdDi1Zw
There’s something more special about Actor Sibiraj, the prestigious banner of Creative Entertainers and Distributors and director Pradeep Krishnamoorthy. They have been always striving to make a difference with each and every element in their projects. After the Hit film ‘Sathya’ Pradeep and Sibiraj are coming together for a project indeed turned the spotlights and now they have found a powerful and perfect title ‘KABADADAARI’ for their film.
Director Krishnamoorthy says, “Finally, we are happy to have zeroed in a perfect title,” and pauses with a smile continuing, “Actually, this was quite a challenging process as we wanted a much appropriate title that befittingly looks perfect for the story premise. We wanted a title that has pure Tamil touch and at the same time easily grasping to crowds. Thanks to the earnest efforts of Dhananjayan sir. As a team, we got ‘KABADADAARI’ finalized.”
Having found the title more appealing, it furthermore urged to ask director Pradeep Krishnamoorthy if the protagonist is a conman in this movie. The director remains tightlipped saying, “Titles are supposed to elevate curiousness and not spoilers. But we have come up with a unique tale that will surely entertain universal audiences.”
Produced by Lalitha Dhananjayan for Creative Entertainers and Distributors, Dr. G. Dhananjayan will be the Creative Producer and N. Subramaniam as Executive Producer.
The star-cast comprises of Sibiraj, Nandita, Nasser, Jayaprakash, J Satish Kumar, Mayilsamy and talks are going on with few more top-league actors to be a part of this project. Winning everyone’s attention with back to back Chartbuster albums, Simon K King is composing music for this film and cinematography is handled by Rasamathi with Praveen KL as Editor, Action by Silva and Videsh as Art Director. The story is penned by M. Hemanth Rao with John Mahendran together with Dr. G. Dhananjayan taking care of Screenplay Adaptation and Dialogues. With the film’s shooting going on floors from November 1, 2019, it will have worldwide release in March 2020.
சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு
கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ. தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ. தனஞ்செயனும் ஏற்கிறார்கள். கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியைச் செய்கிறார். சைமன் கே கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு. கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று மார்ச் 2020-ல் உலகளாவிய திரையரங்கில் வெளியிடப்படும்.