full screen background image
Search
Friday 28 March 2025
  • :
  • :
Latest Update

4ஆம் ஆண்டு திரையரங்க தின விழா – அழைப்பிதழ்

4ஆம் ஆண்டு திரையரங்க தினம்.

திரையரங்கின் தலைமகன் என்று சினிமா ஜாம்பவான்களால் போற்றப்படும் திரு.சாமிக்கண்ணு வின்சென்ட்
அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 18ஐ .திரையரங்க தினமாக FN ENTERTAINMENT நிறுவனம் கொண்டாடுகிறது.

1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.

வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர்.22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர்.


ஆண்டுகள் பல கடந்தாலும் இவர் தொடங்கிய வெரைட்டி ஹால் திரையரங்கம் டிலைட் என்ற பெயரில் இப்போதும் கம்பீரமாக சாமிக்கண்ணுவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது.

இவரின் பிறந்தநாளான ஏப்ரல் 18 ஐ ஆண்டுதோறும் திரையரங்கு தினமாக கொண்டாடும் விதமாக FnEntertainment சார்பாக செந்தில்நாயகம் மற்றும் ஆனந்தவரதராஜன் ஆகியோர் Village Theater உரிமையாளர் திரு. முருகானந்தம் அவரின் முழு ஆதரவுடன் இவ்வாண்டு சென்னை கமலா திரையரங்கில் காலை 8.00.மணிக்கு 2011ல்.தேசிய விருதுபெற்ற “வாகை சூடவா ” திரைப்படத்தை திரையிட்டு, 10.00 மணியளவில் வாகை சூடவா படக்குழுவினரோடு இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. இவ் விழாவை First Step PR Service சார்பாக திரு எம். பி. ஆனந்த் ஒருங்கிணைக்கிறார் எனவே இதில் தாங்கள் தங்கள் புகைப்பட மற்றும் வீடியோ குழுவினரோடு கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *