full screen background image
Search
Friday 7 February 2025
  • :
  • :

எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது புகார்! . படநிறுவனம் மறுப்பு! நாளை கமிஷனரை சந்திக்கிறார்!

எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது புகார்! .

படநிறுவனம் மறுப்பு!

நாளை கமிஷனரை சந்திக்கிறார்!

சுமார்70 படங்களை இயக்கி ,40 படங்களை தயாரித்தவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீதுகமிஷனர் அலுவலகத்தில் 20 லட்சம் மோசடி செய்ததாக மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் “கிரீன் சிக்னல்” நிறுவனம் மறுப்பு

தெரிவித்துள்ளது.

2018-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் “டிராபிக் ராமசாமி” என்ற படம் தயாரிக்கபட்டது .இந்த படத்தை கனடா நாட்டை சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாடு வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார்.இதற்காக 20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார்.ஆனால் ஒப்பந்தப்படி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியனால் தர முடியவில்லை.படவெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார்.அதனால் வியாபார சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினோம்.அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்வதால் படவெளியீட்டை தள்ளிவைக்கவும் முடியாத நிலை .இந்நிலையில் படம் வேறு விநியோகஸ்தர்களுக்கு விற்கபட்டால் பணத்தை தந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் கடைசிநேரமாக இருந்தமையால் படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகரனே தமிழகமெங்கும் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார் .இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார்.ஆனால் இந்தப்படத்தை வாங்குவதற்க்கோ வெளியிடுவதற்க்கோ எந்த தொடர்புமே இல்லாத திரு.மணிமாறன் அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார் .தனது 40 ஆண்டு திரையுலக பயணத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதுவரை யாரையும் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் வந்ததில்லை.சினிமா தொழிலில் நாணயத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வருபவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.அவரது புகழை கெடுக்கவும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றியுள்ளார்கள்.நடந்த உண்மைகளை ஆதாரத்துடன் நாளை கமிஷனரை சந்தித்து புகார் கொடுக்க உள்ளார் .இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரின் “க்ரீன் சிக்னல்” நிறுவனம் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *