full screen background image
Search
Wednesday 6 November 2024
  • :
  • :
Latest Update

கோவை ஸ்ரீதேவி சிவாவிடம் தோண்ட தோண்ட அறிதான புதையல்…

கோவை ஸ்ரீதேவி சிவாவிடம் தோண்ட தோண்ட அறிதான புதையல்…

இவர் கோயமுத்தூர் ஸ்ரீதேவி டெக்ஸ்டைலின் உரிமையாளர் ஸ்ரீதேவி சிவா என்ற சிவகணேஷ். தன் பள்ளிப் படிப்பை 12-ம் வகுப்பு வரை Carmel Garden பள்ளியில் படித்து முடித்துவிட்டு, ஸ்ரீதேவி டெக்ஸ்டைலை நடத்தி வந்த அவரது அப்பா,அம்மாவிடம் டெக்ஸ்டைலில் வேலை பார்க்க வந்துவிட்டார். இவரது கடின உழைப்புக்கு இன்று பலன் கொடுத்தது ஸ்ரீதேவி டெக்ஸ்டைல். ஸ்ரீதேவி சிவாவின் சமூக சேவைகளை பார்த்தும், படித்தும், கேட்டும் லட்சக்கணக்கான உலக மக்கள் வியந்து போற்றுகின்றார்கள். இவரை தெரிந்தவர்கள் இந்தியாவில் மட்டும்மில்லை, உலகம் முழுதும் மக்களை அன்பால் கட்டியணைத்தவர். UK, US, SCOTLAND, SINGAPORE, MALAYSIA என்று இன்னும் பல நாடுகளிலிருந்து மக்கள் ஸ்ரீதேவி டெக்ஸ்டைலுக்கு ஆடைகளை எடுக்க வருவதன் மூலம் உரிமையாளர் சிவாவின் சமூக சேவைகளை அறிந்து வெளிநாட்டவர்கள் பாராட்டிச் செல்வார்களாம். இவர் செய்யும் சமுதாய பணிக்கு Fans-ம், Donors-ம் வந்து குவிகின்றனர். ஆனால், அதற்கு இவர் சொல்வது, மக்களுடைய அன்பு மட்டும் போதும். Fans ஏதும் வேண்டாம். இன்று நாம் எல்லோரும் உழைத்தால் தான் சாப்பாடு என்கிறார். நன்கொடை எதுவும், யாரிடமும் வாங்குவதில்லையாம். நன்கொடையாக கொடுக்க நினைக்கும் பணத்தை வைத்து முடியாதவர்ளுக்கு ஒரு வேளை உணவாவது வாங்கிக் கொடுங்கள் என்று பணிவுடன் கேட்கிறார். இவர் செய்யும் சமூக சேவைகளின் அற்புதமான விஷ்யம் என்னவென்றால், ஸ்ரீதேவி டெக்ஸ்டைலிருந்து வரும் வருமானத்தை வைத்து முடியாத மக்கள்களுக்கு மற்றும் முடியாத கால்நடைகளுக்கு என்று நிறைய சேவைகளை செய்து வருகிறார். ஸ்ரீதேவி சிவா அவர்கள் அப்படி என்ன சேவைகளை செய்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டதில், வருசியாக அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.

அரசு மருத்துவமணைக்கு Treatment எடுக்க வரும் அனைத்து நேயாளிகளுக்கும், அவர்களுடன் வரும் Attenders-க்கு என்று மதிய உணவாக 2000 பேருக்கு வழங்குகிறார்.

முடியாத ஏழைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் முடியாத ஏழை குழந்தைகளின் படிப்பு செலவிற்கு தினமும் 3லட்சம் அளவில் உதவி செய்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு தடை செய்த சமயத்தில் ஜல்லிக்கட்டு காளைகளெல்லாம் வெட்டுக்கு சென்றது. இதை அறிந்த சிவா அவர்கள் 2015-ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி கோசாலா என்ற பெயரில், கோயமுத்தூரை அடுத்த நரசிபுரத்தில் 50 ஏக்கர் நிலத்தை மாடுகள் காப்பகத்திற்க்காக வாங்கி ஆரம்பித்தார் அன்று. இன்றோ அக்காப்பகத்தில் ராணுவ அணிவகுப்பாக 250 ஜல்லிக்கட்டு காளைகளும் மற்றும் பசுக்களும், கன்றுகளும் என்று 3000 மாடுகளை இறுதி இறப்பு வரை மிக பாதுகாப்பாக வளர்த்து வருகிறார். இந்த கோசாலாவிற்கு Central Government-லிருந்து ஒரு Award-ம் கொடுத்துயிருக்கிறார்கள். வெள்ளியங்கிரி கோசாலா கால்நடைகளை வளர்ப்பதற்கு தோராயமாக, ஒரு நாளைக்கு 4லட்சம் செலவிட்டு பராமரித்து வருகிறாராம்.

South Kailash என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலின் ஏழு மலைகளையும், கோவிலையும் Incharge எடுத்து வருட வருடம் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை நடத்தி கொடுத்து வருகிறார். இதற்க்காக பல பல லட்சங்களை செலவிட்டு பாதுகாப்பாக நடத்தி வருகிறாராம்.

வருட வருடம் ரம்ஜான் நோன்பை திறப்பதற்கு வரும் 500, 600 மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எல்லா உதவிகளை செய்து கொடுத்து வருவாராம்.

ஸ்ரீதேவி சிவா அவர்களிடம் எப்போதும் 5000 Blood Donors-கள் இவர் கையில் இருந்துகொண்டேயிருக்குமாம். இன்று வரை பல ஆயிரக்கணக்கான முடியாத மனிதர்களுக்கு, Blood Donors-சை சரியான நேரத்திற்கு பாதுகாப்பாக Hospital-க்கு அனுப்பி வைத்துயிருக்கிறாராம்.

இவரது கடின உழைப்பால், ஸ்ரீதேவி டெக்ஸ்டைலுக்கு Highest Tax Payer Award 2019-யில் Taxation Department-யிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாம்.

கோயமுத்தூரின் ஸ்ரீதேவி சிவா அவர்கள் இன்னும் பல சேவைகளை பல இடங்களில் மறைமுகமாக செய்து கலக்கிக் கொண்டுயிருக்கிறாராம். இவர் எத்தனை சேவைகள் செய்தாலும், இவரது ஸ்ரீதேவி டெக்ஸ்டைலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நலனை மட்டும் அதிக கவனம் செலுத்தி, ஒரு முதலாளியாக மட்டும் இல்லாமல் சகதொழிலாளர்களோடு எளிமையாக வந்து வேலை செய்துகொண்டுயிருக்கும் முதலாளியை நாங்கள் இங்கு தான் பார்த்துயிருக்கிறோம். இவரது தூக்கத்தைக்கூட பொருட்படுத்தாமல், காலை 9:30 மணிக்கு வந்து கடையை திறக்கிறார். அடுத்து வழக்கமாக இரவு 2 மணி வரை கடையில் உள்ள வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வாராம். இதையெல்லாம் கேட்டுவிட்டு, நாங்கள் சிவா அவர்களை சந்தித்து ஆர்வமாக பேச அவரது கடைக்கு சென்றோம். இங்கு சிவா அண்ணா யார் என்று ஒருவரிடம் கேட்க, அவரும் காண்பித்தார். சாதாரண உடையில் நின்று, வரும் வாடிக்கையாளர்களிடம் பணிவாக பேசிக் கொண்டுயிருந்தார். அங்கு வரும் எல்லோரும் அவரை அண்ணா அண்ணா என்று தான் அழைக்கிறார்கள். அவரொட எளிமையான உடை, பணிவான பேச்சை பார்க்கும்போது எங்களுக்கு ஒருவித சந்தேகம் வந்தது. உண்மையில் இவர்தான் இந்த கடையின் உரிமையாளர் சிவா அவர்களா? என்று. சந்தேகத்தில் மறுபடியும் அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டோம். அதற்கு அவரும், அவரே-தான் என்றார். நாங்கள் வந்த விஷ்யத்தை சொல்ல, அவரிடம் சென்றோம். அவரும் பணிவாக எங்களிடம், Please ஒரு இரண்டு நிமிடம் உட்கார்ந்துயிருங்கள் இப்ப வந்தற்ற சார் என்று சொல்ல, நாங்களும் அமர்ந்திருந்தோம். அதே போல இரண்டு நிமிடத்தில் வந்து எங்களிடம் சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க. நாங்களும் அவரை வாழ்த்திவிட்டு, தொடர்ந்து அவரது நான்கு சமூக சேவைகளைப் பற்றி மூச்சு முட்டமுட்ட கேட்டோம். அதற்கு சிவா அவர்கள் Simple-ஆக ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு, அடுத்து வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். அது என்னவென்றால், இந்த சேவைகளை நான் செய்யவே இல்ல. எல்லாம் என் வெள்ளியங்கிரி ஆண்டவர் தான் செய்துயிருக்கிறார் என்று சொல்லிவிட்டு, எங்களுக்கு ஒரு வணக்கத்தை கூறி, எங்களிடமிருந்து அவர் செல்ல செல்ல ஒரு கடை தொழிலாளரை அழைத்து எதோ எங்களை கைக்காட்டி சொல்கிறார். அந்த தொழிலாளர் எங்களை அழைத்துக்கொண்டு ஸ்ரீதேவியின் Canteen-க்கு சென்று, நல்ல உபசரிப்புடன் வயிறு நிறைய சாப்பிட வைத்து அனுப்பிவைத்தனர்கள். இவரை போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் இன்றும் எதோ கொஞ்சம் மழை பெய்து கொண்டுயிருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *