full screen background image
Search
Monday 16 September 2024
  • :
  • :
Latest Update

நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் ருசிகர பேச்சு

நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன்

“ கோலா “ இசை வெளியீட்டு விழாவில்

இயக்குனர் பாக்யராஜ் ருசிகர பேச்சு

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப்-ல் நடைபெற்றது,

விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் “ஜாகுவார் தங்கம் பேசியதாவது,

“கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லி இருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவுசெய்து நல்லபழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும். இந்தியாவின் அடையாளமாக பாக்கியராஜ் சார் இருக்கிறார். அவர் இப்படத்தின் விழாவிற்கு வந்தது சந்தோஷம். இப்படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்துகள். ஆங்கில மொழியை பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள். தமிழ் பல ஆயிரம் ஆண்டுகள் பெருமை கொண்டது. தயவுசெய்து தமிழில் பேசுங்கள். படத்தின் பாடல்கள் மிக அருமையாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும். ஏன் என்றால் இப்படியான படத்தை நாம் வரவேற்க வேண்டும். படத்தில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், எடிட்டர் உள்படம் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப்படத்தில் எல்லாரும் ஒரு குடும்பமாக வேலை செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.”

இயக்குநர் மோத்தி.பா பேசியதாவது..

“இந்தக் கோலா படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்று கூறும் விழா தான் இவ்விழா. இசை அமைப்பாளருக்கும் நடனத்தை சிறப்பாக அமைத்து தந்தவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மாஸ்டர் தருண் அவர்களுக்கும், மற்றும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. இந்தியாவின் அடையாளமான பாக்கியராஜ் அவர்களுக்கும் நன்றி” என்றார்

இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது..

,”கோலா படத்தின் விழா நாயகன் மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம். இன்னொரு விழா நாயகன் இசை அமைப்பாளர். அவர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார். கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது. சேவிங் பண்ண வந்த ரவுடி கடைகாரனிடம் கிராஜ் இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லையென்றால் வெட்டி விடுவேன் என்றானாம்

அனைவரும் பயந்தார்கள்..ஒரு சிறுவன் தைரியமாக செய்தான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் “உனக்குப்பயம் இல்லையா”என்று கேட்டான். அதற்கு சிறுவன் சொன்னான், ” கிராக் ஆனால் நீங்கள் வெட்ட அருவாள் எடுக்கும் முன்பாக நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்” என்றார். ஆக துணிச்சலுக்கும் வயசுக்கும் கூட சம்பந்தமில்லை

கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது..புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். தருண் மாஸ்டர் நல்லா பன்றார் என்று என் படத்திற்கு கூப்பிட்டேன். என் ரூமை சுற்றி சுற்றி பார்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, “இல்லை எப்படியாவது இந்த ஆபிஸுக்கு வரவேண்டும் என்பது என்கனவு” என்றார். அவர் தொழிலை தொழிலாக செய்யக்கூடியவர். தயாரிப்பாளர் மூர்த்தி பா சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் எனக்கு முந்தானை முடிச்சு படம் தான் பிடிக்கும். என்றார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் காதில் வந்து, ” எனக்குப் பிடிச்ச படம் சின்னவீடு” என்றார். அவர் போலீஸ்காரர் என்பதால் வாங்கி தான் பழக்கம் என்று நினைத்தேன்..ஆனால் இவர் எல்லாத்திற்கும் சம்பளத்தைச் சரியாக கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த கோலா படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்” என்றார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *