full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

நாட்டு நடப்பைப் பிரதிபலிக்கும் ராமாயண பாத்திரம் ‘ தண்டகன் ‘

நாட்டு நடப்பைப் பிரதிபலிக்கும் ராமாயண பாத்திரம் ‘ தண்டகன் ‘

ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’

#focusnewz #kollywoodmix

இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன .அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால் உணர முடியும்.

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர் . தொழில் துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார்.

படத்தின் கதை என்ன?

தண்டகன் என்பவனின் தீய குணம் கொண்ட ஒருவனால் பல கொடூரமான செயல்கள் மூலம் இந்த சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்பதை மிக சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்த தண்டகன் திரைப்படம். பார்ப்பவர்களை ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பான படமாக அமைந்துள்ளது என பட குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி ,ஆதவ், ராம் , வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு தளபதி ரத்னம், இசை – ஷ்யாம் மோகன், எடிட்டிங் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சி – பில்லா ஜெகன், நடனம் – ஸ்ரீசெல்வி , மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார்.

சிக்கலான ஒரு கதையை எளிமையான திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்திருக்கிறார் இயக்குநர். சலிப்புக்கும் தொய்வுக்கும் இடமில்லாத விறுவிறுப்பான திரைக்கதையால் பார்ப்பவர்களைக் கவரும் படமாக உருவாகி வருகிறது ‘தண்டகன்’. இப்படத்தை விரைவில் திரையில் வெளியிட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *