full screen background image
Search
Friday 23 February 2024
  • :
  • :

ரகுமானின் அடுத்த அதிரடி, “ஆபரேஷன் அரபைமா”

ரகுமானின் அடுத்த அதிரடி,
“ஆபரேஷன் அரபைமா”
Operation Arapaima

துருவங்கள் 16 படத்தின் மிக பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”.

பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர், ப்ராஷ், இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக “நாடோடிகள்” அபிநயா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா”.

நடிகர்கள்:
ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மணிஷா மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்: இசை : ராகேஷ் பிரம்மானந்தம் ஒளிப்பதிவு : ஃபீனிக்ஸ் உதயன் படத்தொகுப்பு: விஜயகுமார், ஷைஜூ, பாடல்கள் : முருகன் மந்திரம் வசனம் : ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம், இணை இயக்குநர் : சஜி சுரேந்திரன் சண்டைப் பயிற்சி : கேப்டன் அனில்குமார் (Rtd NSG Commando Trainer), & கமாண்டோ அஜித்குமார், (Thunderbolt Commando Chief, Kerala Police). நிர்வாகத் தயாரிப்பு: சுஜித் சுதர்சன், க்ரீன் லைன் கண்ணன், அப்பு, ஜெயின் ஜார்ஜ், ஷைஜூ யோஹனன் புரொடக்சன் கண்ட்ரோலர் : ஏழுமலை சரவணன், பாதுஷா புரொடக்சன் மேனேஜர் : கவி சேகர், ஷின்ஜோ, ஜிதேஷ், நிரேஷ் ஸ்டில்ஸ் : வித்யாசாகர், மேக் அப்: லிபின், டிசைன்ஸ்: ஸ்ரீஸ்டி பிரின்ஸ் VFX: கேமரூன் ஃப்ளிக்ஸ் ஆடியோ: ராஜீவம் மியூசிக்

கதை, திரைக்கதை, இயக்கம் : ப்ராஷ் – PRASH
தயாரிப்பு : டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ்

Rahman’s Next Suspense Thriller;Titled,
“OPERATION ARAPAIMA”

After giving a tremendous block buster Dhuruvangal 16(D16) Actor Rahman is all set to take up a completely different character role in “Operation Arapaima”. The Film is directed by Prash who has earlier worked as an associate with Director T.K Rajivkumar and Major Ravi of “Arann” Fame. Prash already has working experience in all four major languages. Before entering into the Film Industry Prash previously has worked as an Adventure Pilot in the Indian Army. The Film is produced by Time and Tide Frames.

Talking about the story baseline director Prash says, The story is a suspense thriller which is based on an integrity and courageous naval officer. Based on true incidents the story has been made. I am really happy to board Rahman to play this character. He gave me the exact character which I have imagined in my mind. Abinaya of “Nadodigal” fame plays the female lead in this film. Operation Arapaima is said to be made in bilingual with modern technology in a big budget.

Along with Rahman and Abinaya, Tiny Tom, Gowri Lakshmi, Shihad, Aravind Kaladar, Saji Surendhran, Neha Saxena, Samson T Wilson, Anoop Chandran, Balaji,Ramesh, Danny, Mohitha Patak and Manisha are performing in supporting roles.

Covering up with the technical teams, Rakesh Brammandan is scoring the music while Finix Udhayan is handling Cinematography. Murugan Manthiram is penning the lyrics and the dialogues are done by Prash, Aravind Kaladhar, Murugan Manthiram. The Film is Co directed by Saji Surendhran. Stunts are main part of this story which is handled by Captain Anilkumar (Rtd NSG Commando Trainer) and Commando Ajithkumar (Thunderbolt Commando Chief, Kerala Police).The Executive producers are Sujith Sudharsan, Green Line Kannan, Appu, Jain George, Shyju Yohannan and the production controllers are Elumalai Saravanan, Badhusha. Production Managers are Kavi Sekar, Shinjo, Jithesh,Nireesh. Stills Vidhyasagar and Makeup done by Libin and the designs are done by Shristi Prince. The VFX is done by Cameron Flix and for Audio is Rajeevam Music.

Story-Screenplay-Direction: Prash
Produced by: Time And Tide Frames
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *