full screen background image
Search
Tuesday 10 December 2024
  • :
  • :
Latest Update

“பிரம்மபுரி ” movie stills and news

“பிரம்மபுரி ” movie stills and news

ஜெர்மன் அழகி கதாநாயகி _

பார்த்திபன் உதவியாளர் இயக்கிய படம்.!

“பிரம்மபுரி ”

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட மர்மப் படம்!

பல நூற்றாண்டுகளாக “பிரம்மபுரி” என்ற காணாமல் போன நகரை தேடி வந்த தகவல் இந்த நூற்றாண்டில் ஒரு குழுவிற்கு தெரிய வருகிறது. அந்த நகரில் தான் மிகப் பெரிய வைரப்புதையல் இருப்பதாகவும் கேள்விப்பட்ட அந்த குழுவினர் அந்த நகரையும் புதையலையும் தேடி புறப்படுகின்றனர். அந்த குழுவினர் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களும், பல அமானுஷ்யமான நிகழ்வுகளும் அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறது. இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா?மாண்டார்களா? என்பதை திரில்லாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறேன். அமெரிக்காவில் பெரும் பகுதி படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு – கேரளா-கர்நாடக வனப் பகுதிகளிலும் படம் வளர்ந்துள்ளது.” என்றார். ” இயக்குனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் கிரண் மோகன் இயக்குனர் பார்த்திபனிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்
என்பது குறிப்பிடத் கக்கது.

இதில், வர்கீஸ், ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மார்ஷா, மிதுனா, ராம்சுபீன் ஜோஸ், பவானி அம்மா, கௌதம், ‘மலேசியாவை சேர்ந்த ‘அஜித் ஆகியோருடன் மேலும் பலரும் நடித்துள்ளனர்.

ராகேஷ் வாலி ஒளிப்பதிவையும், மிக்கு காவில் இசையையும், பிரதீப்சங்கர் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

எபின் கொட்ட நாடன் மிகுந்த பொருட் செலவில் 369 பிலிம்ஸ் சார்பில்
“பிரம்மபுரி ” படத்தை தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *