full screen background image
Search
Friday 7 February 2025
  • :
  • :

“பூதமங்கலம் போஸ்ட்” movie stills

“பூதமங்கலம் போஸ்ட்” movie stills

பணம் – பதவி – அதிகாரம்
நண்பர்களுக்குள் அரசியல்

“பூதமங்கலம் போஸ்ட்”
புதிய படத்தில் ருசிகரம் |

“நாம அரசியல்ல இருக்கலாம் நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள் படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது. இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியலில் அதிகாரத்தை கைபற்றினார்கள் என்பதை ஆக்சனுடன் கிளுகிளுப்பு மற்றும் நகைச்சுவை கலந்து அதற்கு “பூதமங்கலம் போஸ்ட் ” என்று பெயரிட்டு படமாக்கி இருக்கிறோம்.” என்கிறார் ” இயக்குனரான ராஜன் மலைச்சாமி.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட இதில் , ராஜன் மலைச்சாமி, விஜய் கோவிந்தசாமி, மெளனிகா ரெட்டி, அஸ்மிதா, மு.தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி, சாய் பாலாஜி, ஆனந்தராஜ், மதுரை சூர்யா, ஆகியோருடன் மாஸ்டர் தக்ஷித் தேவேந்திரா நடித்துள்ளனர்.

மதுரை, அழகர்கோவில் , மேலுார், சிவகங்கை, சென்னையில் எண்ணூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது.
நடன பயிற்சியை ஜாய் மதியும், சண்டை பயிற்சியை நாக் அவுட் நந்தாவும், கலையை சாய்மணியும், தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகனும், ஒளிப்பதிவை பிரேம்குமாரும், படத்தொகுப்பை ஏ.எல்.ரமேஷ் கவனித்துள்ளனர்.

சிவயன், அர்ஜுன் எழுதிய பாடல்களுக்கு அர்ஜுன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து ராஜன் மலைச்சாமி டைரக்ட் செய்துள்ளார்.

சிசிவி குரூப்ஸ் சினிமாஸ் மற்றும் வீரகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில் “பூத மங்கலம் போஸ்ட்” படத்தை பொன்கோ சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன்கோ விஜயன் மூவரும் கூட்டாக தயாரித்துள்ளார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *