full screen background image
Search
Friday 7 February 2025
  • :
  • :

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் “V1”

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்கும்

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும்

“V1”

ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பலவகையான பயம் இருக்கும். “V1” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.

கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டியகட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “V1” படத்தின்கதை.

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். இவர்பிரபல திரைப்படங்களான வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மற்றும் இவர் விருதுகள் வாங்கியபல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்டபலர் நடித்துள்ளனர்.

விரையில் வெளியாகவுள்ள “V1” படம் முழுவதும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்

வெளியிடுபவர் – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்

ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.

இசை – ரோனி ரப்ஹெல்

படத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்

கலை – VRK ரமேஷ்

SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்

மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன்

மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *