full screen background image
Search
Wednesday 19 November 2025
  • :
  • :

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி வேடத்தில் நடித்திருந்தேன். நடிக்கும்போதே இந்த கதாபாத்திரம் என்னை மெருகேற்றியது. இதற்கு காரணம் இயக்குனர் சற்குணம்.

பல படங்களில் கதாநாயகனுக்கே பெயர் கிடைக்கும். ஆனால், இந்த படத்தில் விமல், ஓவியாவுடன் சேர்த்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு இப்படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது மேலோங்கி இருக்கிறது. களவாணி 2 திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்ற பத்திரிகைகள், தொலைக்காட்சி, வலைத்தளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தற்போது வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *