full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

​தாய்மொழி தமிழுக்காக ‘சுந்தர தாய் மொழி’ என்ற குறும்படத்தை தயாரித்து நடிக்கும் ஆரி..!

தாய்மொழி தமிழுக்காக ‘சுந்தர தாய் மொழி’ என்ற குறும்படத்தை தயாரித்து நடிக்கும் ஆரி..!

பத்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் குறும்படம் தயாரித்து நடிக்கும் ஆரி..!

சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் இந்த ‘சுந்தர தாய்மொழி’ குறும்படம் சிறப்பு காட்சி யாக திரையிடப்படவுள்ளது. மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவையும் நடத்தயுள்ளார்.

அதனை தொடர்ந்து உலக குறும்பட விழாக்களுக்கு இக்குறும்படத்தை எடுத்து செல்ல உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாவது உலக தமிழ் மாநாடு வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் 32வது ஆண்டுடன் இணைந்து சிக்காகோவில் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் முத்தாய்பாக தமிழின் தொன்மையை தலைமுறை அறிந்திடும் விதமாக நடிகர் ஆரி ‘ஆரிமுகம்’ என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கி சுந்தர தாய்மொழி எனும் குறும்படத்தில் நடிக்கிறார்.

சிகாகோவில் நடைபெறும் தமிழ் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள நடிகர் ஆரி ஜீலை 2ம் தேதி புறப்படுகிறார்.

இக்குறும்படத்தில் முன்னணி தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள்

இக்குறும்படத்ததை குரு.N.நாராயணன் இயக்கியுள்ளார். “நெடுஞ்சாலை” திரைப்பட புகழ் திரு.சத்யா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ‘அண்ணாதுரை’ திரைப்பட புகழ் திரு.தில்ராஜூம், எடிட்டிங்கை தேசிய விருது வாங்கிய திரு.சாபு ஜோசப்பும் செய்துள்ளனர்.

உலக தமிழ் சங்க மாநாட்டில் “கீழடி நம் தாய்மடி” என்ற மையகருத்தை வலியுறுத்தி நடைபெறும். இவ்விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா,பட்டிமன்றம் ராஜா, சீர்காழி சிவசிதம்பரம் முதலிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் கடந்த வருடம் இதே வடஅமெரிக்க நடைபெற்ற 31வது தமிழ்சங்க பேரவையில் தமிழில் கையெழுத்து இடும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி துவங்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தமிழகம் எங்கும் தாய்மொழி கையெழுத்து இடும் முழக்கத்தை தமிழகம் எங்கும் பரப்புரை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *