full screen background image
Search
Friday 17 January 2025
  • :
  • :

கார்த்தி விஜய்யான சுவாரஸ்யம் ! ஜெய்யின் 25-வது படம் லவ் மேட்டர்

கார்த்தி விஜய்யான சுவாரஸ்யம் ! ஜெய்யின் 25-வது படம் லவ் மேட்டர்

சென்னை-28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நீயா-2,இப்படி பல வெற்றி படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் லவ் மேட்டர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி) அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. தனது 25-வது படம் பற்றி ஜெய் கூறியதாவது ……..

துரு, துரு, ஜாலி சுவாரஸ்யம் கலந்து லவ்மேட்டர் திரைப்படம் எனது 25 வது படமாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பல வெற்றிப்படங்களை தந்தது மட்டுமல்லாமல், விஜய்யை வைத்து பல இளமை ததும்பும் படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க 20-வயதுக்குட்பட்ட இளம் உதவியாளர்களுடன் எஸ்.ஏ.சி 20 வயது இளைஞரை போல செட்டில் பணியாற்றியது வியக்க வைத்தது. இளம் தலைமுறையினருக்கு பிடித்த அம்சங்களுடன் இந்தப்படம் உருவாகிறது.வெளியில் கண்டிப்பான இயக்குனர் என்ற பெயர் எஸ்.ஏ.சி.க்கு உண்டு. ஆனால் எல்லோரையும் ப்ரியாக விட்டு ஜாலியாக படமாக்கிய விதம் அருமை. அதனாலே நான் மட்டுமல்லாது எல்லோரும் ஒரு ஜாலி மூடோடு நடித்து வருகிறோம்.

விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி வெற்றிபெற்ற பல படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய். எனவே லவ் மேட்டர் படத்தில் கார்த்தி என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சந்தோஷமாக ஒத்து கொண்டார். லவ் மேட்டர் படத்தை பொறுத்தவரை கலகலப்புடன் நடிப்பதை என்னால் உணர முடிந்தது என ஜெய் கூறினார்.இப்பபடத்தில் இசை:சித்தார்த், ஒளிப்பதிவு :ஜீவன், தயாரிப்பு&இயக்கம் :எஸ்.ஏ .சந்திரசேகரன் .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *