சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்ஷன் த்ரில்லர் படம் !!
தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார்.
தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். இந்த இருவரும் ஒன்றிணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆக்ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
august and the pre production works are going in full swing. We look forward to your continued love and support.
విక్రమ్, అజయ్ జ్ఞానముత్తు, లలిత్ కుమార్ కాంబినేషన్లో బ్రహ్మాండమైన యాక్షన్ త్రిల్లర్ చిత్రం!
తాను నటించే ప్రతి పాత్రను.. కంటిని కాపాడే కనురెప్పలా భావించి అద్భుతమైన నటనతో రక్తికట్టించే నటుడు, ప్రేక్షకులను రెప్పపాటు క్షణం చూపును కూడా పక్కకు మరల్చనివ్వకూడదనుకునే దర్శకుడు కలసి ఓ కొత్త చిత్రాన్ని తెరకెక్కిస్తే?.. అంతేనా, ఆ కొత్త చిత్రానికి 7 స్క్రీన్ స్టూడియో బ్యానరుపై లలిత్ కుమార్ నిర్మిస్తే.. ఇంతకీ, ఆ హీరో విక్రమ్, దర్శకుడు అజయ్ జ్ఞానముత్తు అయితే.. ఆ వార్త చిత్ర పరిశ్రమకే ఓ పండగ అని చెప్పడంలో ఎలాంటి అతిశయోక్తి లేదు. అలాంటి ఆసక్తికర అంశాన్నే ప్రకటనగా చేస్తున్నారు లలిత్ కుమార్. 7 స్క్రీన్ స్టూడియో, వయాకమ్ 18 సంస్థలు సంయుక్తంగా నిర్మిస్తున్న ఈ చిత్రంలో విక్రమ్ హీరోగా నటిస్తున్నారు.
తన దర్శకత్వంలో వచ్చిన “డిమాంటి కాలనీ”, “ఇమైకా నొడిగల్” వంటి రెండు చిత్రాలు అజయ్ జ్ఞానముత్తుకు ప్రత్యేక గుర్తింపును తెచ్చి పెట్టాయి. ఇక నటన కోసం తనను తాను అంకితం చేసుకునే విక్రమ్ ఈ సినిమా కోసం సిద్ధం అయ్యారు. ఎంతో ఆసక్తికరమైన వీరిద్దరి కాంబినేషన్లోని కొత్త చిత్రం షూటింగ్ ఆగస్టులో ఆరంభం కానుంది. 2020 వేసవి వినోదాత్మక చిత్రంగా దీన్ని విడుదల చేయనున్నారు. ఇతర నటీనటులు, సాంకేతిక కళాకారుల వివరాలు త్వరలోనే ప్రకటించనున్నారు.
యాక్షన్ థ్రిల్లర్ వంటి భిన్నమైన కథాంశంతో బ్రహ్మాండమైన బడ్జెట్ తో తెరకెక్కించనున్న ఈ చిత్రానికి సంబంధించి నిర్మాణ పూర్వ పనులు ప్రస్తుతం శరవేగంగా జరుగుతున్నాయి. తమిళం, తెలుగు, హిందీ భాషల్లో ఏకకాలంలో తెరకెక్కనుంది. భారతీయ సినిమాలోనే ఇది చాలా ముఖ్యమైన చిత్రంగా ఉంటుందని చిత్ర యూనిట్ చెబుతోంది.
—