full screen background image
Search
Tuesday 10 December 2024
  • :
  • :
Latest Update

அரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக” பிருத்விராஜ் ஜனகராஜ் நடிக்கிறார்கள்.

அரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”

பிருத்விராஜ் ஜனகராஜ் நடிக்கிறார்கள்.

அது வேற,இது வேற என்ற படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் s.ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு “ஒபாமா உங்களுக்காக ” என்று பெயரிட்டுள்ளார்.

பலரிடம் கதை கேட்டு ,ஆராய்ந்து தேர்வு செய்த படம் தான் “ஒபாமா உங்களுக்காக “படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது .

அரசியலை அடித்து துவைத்து காயப்போடுகிற படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் பிருத்வி நடிக்கிறார். ஜனகராஜ் இது வரை ஏற்றிராத புது அவதாரம் ஏற்கிறார்.

புதுமுகநாயகி பூர்ணிஷா அறிமுகமாகிறார்.இயக்குநர்களாகவே விக்ரமன் ,கே.எஸ். ரவிக்குமார் ரமேஷ்கண்ணா ,மற்றும் T சிவா ,நித்யா, ராம்ராஜ் ,தளபதி தினேஷ் ,செம்புலி ஜெகன் ,கயல் தேவராஜ், விஜய் tv புகழ் கோதண்டம் ,சரத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருக்கிறார்.

பாடல்கள் – வைரமுத்து,

எடிட்டிங் – B.லெனின்

ஒளிப்பதிவு – தினேஷ்ஸ்ரீநிவாஸ்

நடனம் – சுரேஷ்

ஸ்டண்ட் – தளபதி தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – பெஞ்சமின்

“பாஸ்மார்க் “படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை “நாநிபாலா என்று மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.

தயாரிப்பு – ஜெயசீலன்

படத்தைப்பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

தாமஸ் ஆல்வா எடிசன் போனை கண்டு பிடித்தது பேசுவதற்காகத் தான் ஆனால் ஆண்ட்ராய்ட் மொபைலில் பார்க்க முடியாததோ ,சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது. “ஒபாமா உங்களுக்காக படத்தின் “கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும் என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *