full screen background image
Search
Saturday 26 April 2025
  • :
  • :
Latest Update

சீ.வி.குமார் தயாரித்து இயக்கும் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்
சீ.வி.குமார் தயாரித்து இயக்கும்

“கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

பல பிரபல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

பலரின் பாரட்டை பெற்ற “மாயவன்” திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது.

தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் கதைக்கரு.

பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் (பக்ஸ்) , டைரக்டர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்காக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது .

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு, இயக்கம் – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)
இசை – ஹரி டஃபுசியா
இசை (OST) – ஷ்யமளங்கன்
இசை மேற்பார்வை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை
படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்
கலை – விஜய் ஆதிநாதன், சிவா
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
சவுண்ட் டிசைன் – தாமஸ் குரியன்
நடனம் – சாண்டி
மக்கள் தொடர்பு – நிகில்
நிர்வாக தயாரிப்பு – S.சிவகுமார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *