அர்ஜுன் – ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்? இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்!
சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ யார்? இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்!
அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். ‘கழுகு – 2’ படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை ‘பேராண்மை’ , ‘பூலோகம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணா.
‘க்ரைம் நாவல்’ மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்படும் என ஏற்கனேவே அறிவித்திருந்தார்கள்.
அதன்படி இயக்குனர்/தயாரிப்பாளர் லிங்குசாமி நாளை காலை 11 மணிக்கு படத்தின் கதாநாயகன் யார் என்பதையும் படத்தின் பெயரையும் அறிவிக்கிறார்.
#Title & #Cast of #Arjun – #JackieShroff Combo to be revealed by Director #Lingusamy on 13th Sep tomo @ 11 am
@dirlingusamy @Anbudir1 @akarjunofficial @bindasbhidu #Singaravelan @KskMediainbox @KskSelvaPRO