full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

தென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொது குழு கூட்டம் செய்தி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் பொது குழு கூட்டம் ஆரம்பமாகியது. மூத்த உறுப்பினர்கள் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர் .
மறைந்த மூத்த ஆயுட்கால உறுப்பினர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி உட்பட மறைந்த 48 உறுப்பினறுகளுக்கும் மற்றும் கேரளாவில் இயற்கை பேரிடலில் உயிர் இழந்தவர்களுக்கும் ஓரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் வரவேற்புரை ஆற்றினார், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் 2017-2018-ஆம் ஆண்டின் தணிக்கைசெய்ய பட்ட வரவு செலவுகளை வாசித்து ஒப்புதல்பெற்றார், பொருளாளர் SI.கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் உரை நிகழ்த்தினார், பொது செயலாளர் விஷால் நிர்வாக செயல் பாடுகள் விளக்கி ஒப்புதல் பெற்றார்.

அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், நிறைவாக தலைவர் நாசர் ஏற்புரை மற்றும் நன்றி உரை ஆற்றினார் .இறுதியாக தேசியகீததுடன் பொதுக் குழு கூட்டம் நிறைவடைந்தது, செயற்குழு உறுப்பினர் பசுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் , பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதற்கான செலவை ஏற்று கோடா நடிகர்கள் விக்னேஷ், சூரி, மனோபாலா, சதிஷ், யோகி பாபு, சாம்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .

இந்த பொதுக்குழு கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன் ,ஐசரி கணேஷ் ,ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், பசுபதி,AL உதயா,ரமணா,நந்தா,பிரேம்குமார்,விக்னேஷ்,TP கங்கேந்திரன்,MA பிரகாஷ், தளபதி தினேஷ், அயூப் கான், பலதண்டபாணி, கோவை சரளா, சிவகாமி,சங்கீதா, சோனியா, மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, சரவணன்,அஜய் ரத்தினம், லலிதா குமாரி,ஹேமச்சந்திரன்,மருது பாண்டியன், ஜெரால்டு மில்டன், வாசுதேவன்,பழகாந்தி,காளிமுத்து,ரத்தனசபாபதி,KK சரவணன்,காமராஜ்,காலிலுல்லா, பொது மேலாளர் பாலா முருகன்,
நடிகர்கள் விஜயகுமார், K.பாக்யராஜ், GK.ரெட்டி, S.Ve.சேகர், ஆனந்த ராஜ், விஜய் சேதுபதி, ஜீவா, ஜெகன், சதிஷ், யோகி பாபு, அருண் விஜய், நட்டி நடராஜ், ஜேபி, ஹரிஷ் உத்தமன், பிரேம்ஜி, கயல் சந்திரன், சந்தான பாரதி, கஞ்சாகருப்பு, மன்சூரலிகான், முன்னா, ரவி மரியா, ஆன்சன், ரியாஸ் கான், சௌந்தர்ராஜன், பிளாக் பாண்டி, மகேந்திரன், ராமகிருஷ்ணன்,
நடிகைகள் காஞ்சனா, சரோஜா தேவி, பாரதி, ராஜஸ்ரீ, ஷீலா, லதா, ஜெயமாலா, ஹேமா சௌத்திரி, சுகாசினி, ரோகினி, பூர்ணிமா பாக்யராஜ், சத்திய பிரியா, பசி சத்யா, ஊர்வசி, ஆர்த்தி கணேஷ், ஷாலு, ஸ்ரீ லேகா, மற்றும்
சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஆகிய ஊர்களை சேர்ந்த உறுப்பினர்களான நாடக நடிகர்களும் கலந்துகொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *