full screen background image
Search
Wednesday 12 February 2025
  • :
  • :

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் “ஜாங்கோ”

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக

தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம்

“ஜாங்கோ”

தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.

இப்படத்தின் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே துவங்கி வைத்தார்.

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)

இயக்கம் – மனோ கார்த்திக்கேயன்

ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை

இசை – நிவாஸ் பிரசன்னா

படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்

கலை – கோபி ஆனந்த்

காஸ்ட்யும் டிசைனர் – மீனாக்ஷி ஷ்ரிதரன்

சண்டைப்பயிற்சி – ஹரி திணேஷ்

மக்கள் தொடர்பு – நிகில்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *