full screen background image
Search
Friday 17 January 2025
  • :
  • :

AJI-NO-MOTO® (MSG) குறித்த நிஜங்கள் மற்றும் உண்மைகள் குறித்து உரையாட பிரபல சமையல் நிபுணர் மற்றும் உணவியலாளர்கள் ஒன்றுகூடினர்

AJI-NO-MOTO® (MSG) குறித்த நிஜங்கள் மற்றும் உண்மைகள் குறித்து உரையாட பிரபல சமையல் நிபுணர் மற்றும் உணவியலாளர்கள் ஒன்றுகூடினர்

• உலக சாதனைக்கு சொந்தக்காரரும் மற்றும் பிரபலமானதொரு சமையல் நிகழ்ச்சியை வழங்கிவருபவருமான சமையல் கலைஞர் M.S.ராஜ்மோகன், MSG – ன் உமாமி சுவையை கண்டறியும் வகையில் நேரடி சமையலின் வழியாக தனது திறன்களை வெளிப்படுத்தினார்

• பிரபல உணவியலாளர்கள் மருத்துவர். தாரிணி கிருஷ்ணன் மற்றும் மருத்துவர்.திவ்யா புருஷோத்தமன் ஆகியோர், கரும்பு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற இயற்கையான பயிற்களிலிருந்து AJI-NO-MOTO®(MSG) எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்த அறிமுகம் செய்தனர்.

சென்னை, 25 ஜுலை, 2018: உயர்-தரம் வாய்ந்த சுவையூட்டிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் பிரிவில் உலகளாவிய அளவிலான உற்பத்தியாளராக அஜினோமோட்டோ குழுமம் திகழ்கிறது. 1909–ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது 27 நாடுகளில் இயங்கிவருகிறது. உமாமி சுவையை வழங்கும் உட்பொருளான – MSG – உலகளாவிய அளவில் தற்போது ஒரு பிரபலமான சுவையூட்டியாகத் திகழ்கிறது.

இக்கருத்தரங்கிற்கு வருகை புரிந்திருந்து மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், பிரபல சமையல் கலைஞர் M.S.ராஜ்மோகன், பிரபல உணவியலாளர்கள் மருத்துவர். தாரிணி கிருஷ்ணன் மற்றும் மருத்துவர்.திவ்யா புருஷோத்தமன், அஜினோமோட்டோ இந்தியா மேலாண்மை இயக்குனர் அத்சுஷி மிஷ்கு மற்றும் அஜினோமோட்டோ இந்தியா, சந்தையாக்கல் பிரிவின் மேலாளர் திரு.கோவிந்தா பிஸ்வாஸ் ஆகியோர், AJI-NO-MOTO®(MSG) குறித்த நிஜங்கள் மற்றும் உண்மைகள் குறித்து உரையாடினர்.

அஜினோமோட்டோ இந்தியா மேலாண்மை இயக்குனர் அத்சுஷி மிஷ்கு அவர்கள், ‘உமாமி சுவையை மேம்படுத்துவதற்கானதொரு இயற்கையான சுவையூட்டி AJI-NO-MOTO®(MSG) ஆகும். பல்வேறு உணவு ஆதாரங்கள் மற்றும் காய்கறிகளில் அபரிமிதமாகக் காணப்படும் ஐந்து அடிப்படை சுவைகளில் ஒன்று உமாமி ஆகும். காய்கறிகள், தக்காளி, பால், சீஸ் போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் இது நிறைந்துள்ளது. உலகின் முதல் உமாமி சுவையூட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட AJI-NO-MOTO®(MSG), சிறப்பான மற்றும் கட்டுப்படியாகும் விலை கொண்ட சுவையூட்டியின் வழியாக மக்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது’ என்று கூறினார்.

சமையல்கலைஞர் M.S. ராஜ்மோகன் அவர்கள், AJI-NO-MOTO®(MSG) பயன்படுத்தி காலிஃபிளவர் பக்கோடோ தயார் செய்து, நேயர்களுக்கு உமாமியின் சுவையை அறிமுகம் செய்தார். இந்த உணவு வகை, AJI-NO-MOTO® (MSG) மற்றும் காலிஃபிளவர், மிளகுத்தூள், கொத்தமல்லி மற்றும் பல்வேறு பிற உட்பொருட்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்டது. காலிஃபிளவர் பக்கோடாவில் உமாமியின் மனம்மயக்கும் சுவை நிறைந்து காணப்பட்டது. சமையல் கலைஞர் M.S ராஜ்மோகன் அவர்கள், “இயற்கையாக உருவாகும் குளுடமேட்டே, சில உணவுவகைகளை நம்மை நாவூறச்செய்வதற்கும் மற்றும் மீண்டும் மீண்டும் உண்ணத்தூண்டுவதற்கும் காரணமாகும். சுவை குறைவான மற்றும் அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுவகைகளையும் MSG சுவையானதாக மாற்றுவது, அதை உண்ண விரும்பாதவர்களுக்கும் ரசித்து உண்ண உதவுகிறது.

AJI-NO-MOTO® (MSG) – ன் உட்பொருட்களான குளுடமேட், சோடியம் மற்றும் தண்ணீர் குறித்து விவரித்துப் பேசிய, உணவியலாளர் மருத்துவர்.தாரிணி கிருஷ்ணன் அவர்கள், “மோனோ சோடியம் குளுடமேட், மனித பயன்பாட்டிற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். குளுடமேட் அமிலமானது தாய்ப்பாலிலும் கிடைக்கப்பெறும் ஒரு பாதுகாப்பான பொருளாகும். இது இயற்கையான உட்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது” என்று கூறினார்.

மோனோசோடியம் குளுடமேட் (MSG) என்பது, குளுடமிக் அமிலத்தின் (குளுடமேட்) சோடியம் உப்பாகும். MSG ஒரு சுவையூட்டியாகும் மற்றும் அது ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, உணவில் சுவை கூட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுகளில் MSG சேர்க்கப்படுவது, உணவில் இயற்கையாகக் கிடைக்கும் குளுடமேட்டிற்கு ஒப்பான சுவைகூட்டல் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. MSG என்பது தண்ணீர், சோடியம் மற்றும் குளுடமேட் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்” என்று கூறினார்.

AJI-NO-MOTO®(MSG) – ன் பலன்களை மருத்துவர்.தாரிணி கிருஷ்ணன் மற்றும் மருத்துவர்.திவ்யா புருஷோத்தமன் ஆகியோர் வலியுறுத்தினர். நாம் உணவு வகைகளில் உப்பின் அளவைக் குறைத்தால், அது உணவின் சுவையை ஒட்டுமொத்தமாக குறைக்கும். MSG பயன்பாட்டின் வழியாக, உணவின் சுவையை உயர்த்தும் அதே நேரத்தில், சோடியம் பயன்பாட்டினையும் 30% அளவிற்கு குறைக்கலாம். மேலும் இது, ‘உடலுக்குள் சென்று வயிறு நிரம்பிய உணர்வை’ அளிப்பதால், இதனை பயன்படுத்தி உடல்பருமனையும் குறைக்கலாம். மேலும் வயதில் மூத்தோருக்கு உணவின் சுவையை அதிகரிக்கவும் MSG உதவுகிறது.

அஜினோமோட்டோ இந்தியா, சந்தையாக்கல் பிரிவின் மேலாளர் திரு.கோவிந்தா பிஸ்வாஸ் அவர்கள், “AJI-NO-MOTO®[MSG] உணவின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் அது கரும்பு மற்றும் மரவள்ளிகிழங்கு போன்ற மிகச்சிறந்த தரம் கொண்ட பயிர்களிலிருந்து நொதிப்பு செயல்முறையின் கீழ், தயார் செய்யப்படுகிறது. AJI-NO-MOTO®(MSG) – ன் பாதுகாப்பு பல்வேறு சர்வதேச அமைப்புகளின் மருத்துவ ரீதியிலான மற்றும் அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் படி நிரூபிக்கப்பட்டுள்ளது. ADI (ஏற்றுக்கொள்ளத்தக்க தினசரி உட்கொள்ளல் அளவு) குறிப்பிடப்படாமல், சுவையூட்டிகளின் பயன்பாடானது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

*

அஜினோமோட்டோ இந்தியா குறித்து

அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் , அஜினோமோட்டோ குழுமத்தைச் சேர்ந்த உயர்-தரம் வாய்ந்த சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உற்பத்தியாளராகும். பரந்துபட்ட அமினோ அமில தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் வழியாக, இந்தியாவின் உணவு கலாச்சாரம் மற்றும் மானுட ஆரோக்கியத்திற்கான பங்களிப்பினை வழங்குவதை அஜினோமோட்டோ இலக்காகக் கொண்டுள்ளது. 2003 – ம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது தமிழக மாநிலத்தில் இயங்கி வருகிறது. அனினோமோட்டோ இந்தியா குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பார்க்கவும் www.ajinomoto.co.in

மேலும் கூடுதல் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும் IMPRIMIS PR: Mahesh Kumar / Chennai / 98845 45000




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *