இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”.
ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத்தயாரிப்பில்
செந்தில்குமார் இயக்கும் படம் “வீராபுரம்”.
இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. இப்படத்தின் நாயகன் அங்காடித்தெரு புகழ் மகேஷ் மற்றும் நாயகி உறுதிகொள் புகழ் மேகனாவும் நடித்திருக்கிறார்.
மணற்கொள்ளையை பற்றிய கருத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவ கதை , தமிழ் சினிமாவில் வழக்ககமாக சொல்லப்படும் காதல்கதை அல்லாது இப்படத்தில் ஒரு சமுதாய பிரசச்சனையை சொல்ல விரும்பிய இயக்குனர் மணற்கொள்ளையால் நடந்த ஒரு உருக்கமான உண்மைச் சம்பவத்தை மிகவும் அழகாக கையாண்டு வருகிறார்.
இதுவரை நடித்திடாத ஒரு புதுமையான கதாபத்திரத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடித்து வருகிறார், இப்படத்திற்க்குப் பிறகு மகேஷ் மிகச்சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் எனவும் வீராபுரம் மகேஷ் என்று அழைக்கப்படுவார் என்றும் இயக்குனர் நம்பிக்கைத்தெறிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படதிற்கு ஒளிப்பதிவு பிரேம்குமார், இசை ரிதேஷ் & ஸ்ரீதர், எடிட்டிங் கணேஷ்குமார் மற்றும் சண்டைப்பயிற்சி எஸ்.ஆர்.முருகன் ஆகியோர்கள்பணியாற்றியுள்ளனர்..











