full screen background image
Search
Saturday 12 October 2024
  • :
  • :

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் “மாநாடு”!!!

செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு…

இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான்.

முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு.

தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார்.

அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது.

படத்திற்கு “மாநாடு” என பெயர் சூட்டியிருக்கின்றனர்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும்… களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *