full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

Special Convocation of Vels University

Special Convocation of Vels University

The Special Convocation of Vels University was held on 17th March 2017 at the University main campus at Pallavaram at 3:30 PM. Dr.Ishari K.Ganesh, Chancellor of the University, presided over the convocation function.

Prof. Dr.V.Thamizh Arasan, Vice Chancellor, welcomed the gathering and highlighted the achievements of the University.

In the Convocation, Honoris Causa degrees were conferred on Dr.R.Chidambaram, Principal Scientific Adviser to the Govt. of India & DAE – Homi Bhabha Professor, New Delhi and Dr.K.Sridharan, Chancellor of Kalasalingam Academy of Research and Education (KARE), Srivilliputtur, Tamil Nadu, by the Chancellor Dr.Ishari K.Ganesh, in the presence of Dr.A.Jothi Murugan, Vice-President (P&D), Dr.Arthi Ganesh, Vice-President (Academic), Dr.V.Thamizh Arasan, Vice Chancellor, Dr.A.R.Veeramani, Registrar, Dr.Joseph Durai, Controller of Examinations, Members of Board of Management and Academic Council, of the University.

Dr. R. Chidambaram, Principal Scientific Adviser to the Govt. of India, New Delhi, then delivered a Special Address on “Leadership for a Knowledge Economy” and released the books of Research Papers of various Schools of the Vels University.

செய்தி வெளியீடு:
வேல்ஸ் பல்கலைக்கழகம் சிறப்புப் பட்டமளிப்பு விழா

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழா 2017 மார்ச் திங்கள் 17 அன்று பிற்பகல் 3.30 மணிக்குப் பல்லாவரம், வேல்ஸ் பல்கலைகழகத்தில் மாண்பமை வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வேல்ஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் வி. தமிழரசன் அவர்கள் வரவேற்புரை வழங்கி, பல்கலைக்கழகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

இச்சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரும் அணுசக்தித்துறை – ஹோமி பாபா பேராசிரியருமான டாக்டர் இரா. சிதம்பரம் அவர்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் க. ஸ்ரீதரன் அவர்களுக்கும் மதிப்புறு முனைவர் பட்டத்தினை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

இவ்விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சிக்கானத் துணைத் தலைவர் டாக்டர் ஆ. ஜோதி முருகன் அவர்களும் கல்விக்கான துணைத்தலைவர் டாக்டர் ஆர்த்தி கணேஷ் அவர்களும் துணைவேந்தர் டாக்டர் வி. தமிழரசன் அவர்களும் பதிவாளர் டாக்டர் எ. ஆர். வீரமணி அவர்களும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் ஜோசப்துரை அவர்களும் வேல்ஸ் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களும் கல்விக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் இரா. சிதம்பரம் அவர்கள் அறிவுப் பொருளாதாரத்திற்கான தலைமைப் பண்பு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு புலங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *