full screen background image
Search
Tuesday 10 February 2026
  • :
  • :
Latest Update

நடிகர் ரவிராகுல் இயக்கத்தில் “ களவாணி சிறுக்கி “ ஈரோட்டில் இசை வெளியீடு

நடிகர் ரவிராகுல் இயக்கத்தில் “ களவாணி சிறுக்கி “நடிகர் ரவிராகுல் இயக்கத்தில்

“ களவாணி சிறுக்கி “

ஈரோட்டில் இசை வெளியீடு

ராணா கிரியேசன்ஸ் அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம் தயாரிக்கும் படம் “ களவாணி சிறுக்கி “

இந்த படத்தில் சாமி, திவாகர், சங்கர்கணேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சுகிரிட்டி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.நமச்சிவாயம் நடிக்கிறார், வில்லனாக கெளரி சங்கர் அறிமுகமாகிறார். மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மோகன் டச்

இசை – தருண் ஆண்டனி

பாடல்கள் – டாக்டர் கிருதியா

எடிட்டிங் – ராம்நாத்

நடனம் – சிவகிருஷ்ணா

ஸ்டன்ட் – டேஞ்சர் மணி

தயாரிப்பு மேற்பார்வை – என்.அபிமன்னன்

தயாரிப்பு – அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம்

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் – ரவிராகுல். இவர் ஆத்தா உன் கோவிலிலே, மிட்டா மிராசு, தமிழ்பொண்ணு, மாங்கல்யம் தந்துனானே உட்பட ஏராளமான் படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவர் இயக்கம் மூன்றாவது படம் இது.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..

ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுற விதம் , நல்ல விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும், அல்லது தவறான விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும் . அது அவரவர்கள் புரிந்துக்கொள்கிற மனப்பக்குவத்தை பொருத்தது.

கிராமத்தில் இருக்கிற பெண் ஒருத்தி ஒரு வாலிபனிடம் எதார்த்தமாக பழகுகிறாள், ஆனால் அதில் ஒருத்தன் அதை தவறாக நினைத்து அவளிடம் தப்பாக நடக்க முயல்கிறான். இறுதியில் அவன் நினைத்தது நடந்ததா, இல்லை என்ன பிரச்சனைகளை அவன் சந்தித்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, பொள்ளாச்சி, ஈரோடு அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா முதல் முறையாக ஈரோட்டில் உள்ள சீனிவாசா திரையரங்கில் நடைபெற்றது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இசையை வெளியிட்டார்.
ஈரோட்டில் இசை வெளியீடு




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *