full screen background image
Search
Tuesday 18 June 2024
  • :
  • :

கடுகு- திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா படங்கள் மற்றும் செய்தி

ARTISTS
BHARATH * SUBIKSHA * RAJAKUMARAN * RADHIKA PRASHITHA * BARATH SEENI * A.VENGATESH DHAYA VENGAT * SAKTHI * SHANLEY * KOVAI UMA

TECHNICIANSLIST

STORY,SCREENPLAY & DIRECTION * VIJAY MILTON S.DCINEMATOGRAPHY * VIJAY MILTON S.DMUSIC * ARUNAGIRI S.N BACK GROUND MUSIC * ANOOP SEELINLYRICS * MADHAN KARKYEDITOR * JOHN ABRAHAM ART DIRECTOR * JANARTHANAN .RSTUNT * SUPREME SUNDARCOSTUME * SEENU CHOREOGRAPHER * SRIDHAR MAKE UP * MOHAN STILLS * AJAI RAMESH PRODUCTION EXECUTIVE * ANNAMALAI, SELVA PRODUCTION * ROUGHT NOTE PRODUCER * BARATH SEENI PRESENTS * SURIYA 2D ENTERTAINMENT

“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குருந்தகடை வெளியிட, கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார்.

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர் ஆவார்.

சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்.

கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துரை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள் விரும்பும் தொகையை கொடுத்துவிட்டு செல்லலாம். கோவில் போல சேவையாக இவர்கள் நடத்தும் இந்த ஓட்டலில் 26 வகையான உணவு வகைகள் பறிமாறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது இந்த தனி பண்புகளை பாராட்டும் வகையில், கடுகு படத்தின் பாடல்கள் இவர்கள் மூலமாக வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜசேகர் கற்பூரப்பாண்டியன் பேசுகையில், “

கிரிக்கெட் விளையாட போனது உண்மைதான், அங்கு போகும் போது டென்னிஸ் பால் என்றார்கள், ஆனால் அங்கு போனதும் கிரிக்கெட் பாலா மாத்திட்டாங்க, அதனால விட்டுட்டேன். கடுகு இந்த படம் எங்க கிட்ட வந்தது அதிஷ்டம் தான் என்று சொல்லனும், நன்றி மில்டன் சார். பரத் சீனி மில்டன் சாரோட தம்பி, வீட்டுக்கு வந்தாரு. பென் டிரைவரு எடுத்து வந்தாரு, சார் மில்டன் சார் அனுப்புனாறு பென் டிரைவர்
கொடுக்கனும் என்றார். நீங்களே வாங்க டெஸ்ட் பண்ணலாம் என்று அவரை உள்ளே அழைச்சிட்டு போய்ட்டேன்.

பென் டிரைவரை போட்டுட்டு டெஸ்ட் பண்ணும் போதே ரொம்ப இண்டர்ஸ்டிங்கா இருந்தது, அப்பவே அரை மணி நேரம் படம் பார்த்தேன், அவரும் கூட இருந்தார், படம் ரொம்பவே இண்டர்ஸ்டிங்கா இருந்தது. பிறகு சார் நான் கிளம்புறேன் என்று திரும்பி அவரு போனதும், நான் யோச்சிட்டே இருந்தேன், அவர் திரும்பவும் வந்து, சார் நான் தான் படத்தோட புரொடியுஷர், நானும் ஒரு ரோல் பண்ணியிருக்கேன் என்று சொன்னார். ஆனா எனக்கு அடையாளமே தெரியல, அந்த அளவுக்கு படத்துல நடிச்சவங்க அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்காங்க.

அவ்வளவு அழகா பண்ணியிருக்காங்க, ரொம்ப ஸ்டாங்கான மெசஜை எவ்வளவு எளிமையா சொல்லனுமோ அவ்வளவு எளிமையா சொல்லியிருக்காங்க. ராஜ்குமார், பரத், சனுஷா, பரத் சீனி எல்லோருமே சூப்பரா பர்பார்ம் பண்ணியிருக்காங்க, இந்த படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். 2டி மியூசிக் லேபல் லாஞ்ச் பண்ணியிருக்கோம். முதல் பாடல் மகளிர் மட்டும் பாடல் ரிலீஸ் பண்ணியிருக்கோம். முதல் படமா கடுகு லாஞ்ச் பண்ணியிருக்கோம். உங்க எல்லோரடைய சப்போர்ட்டும் வேண்டும் பிரஸ் மீடியா இணையதளம் என அனைத்து நண்பர்களுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன், உங்களால மட்டும் தான் சரியான இடத்துல கொண்டு போய் சேர்க்க முடியும். நீங்க பெரிய அளவில் சப்போர்ட் பண்ணனும் என்று கேட்டுக்குறேன். நன்றி.

விழவில் நடிகர் பரத் பேசுகையில் :

என்னைக்கும் நான் சம்பளத்தை இரண்டாம் பட்சமாகத்தான் வைத்திருக்கிறேன். அதனாலா தான் பதினாலு வருஷம்
போட்டியான சினிமாவுல என்னால நீடிக்க முடிந்தது. நான் தயாரிக்கல ஆனா, தயாரிப்பாளர்களுடைய கஷ்ட்டங்களை பார்த்திருக்கிறேன், நல்ல இயக்குநர்கள் நல்ல கதைகள் வேண்டும் இந்த பதினாலு வருசத்துல நல்ல படங்களை கொடுக்க முயற்சி பண்ணியிருக்கேன். அந்த வகையில் இந்த படம் எனக்கு கிடைத்த நல்ல படம். நன்றி மில்டன் சார். எனக்கு இந்த கதாபாத்திரத்தை நம்பி கொடுத்ததற்கு . காதல் படத்தில் இருந்தே மில்டன் சார் எனக்கு பழக்கம்.

ஒளிப்பதிவாளராக பார்த்து, பிறகு இயக்குநராக என்னை வைத்து ஒரு படம் பண்ணாறு. பிறகு கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள, கடுகு வரைக்கும் அவரோட டிராவல பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று போராடக்கூடிய கிரியெட்டர்களில் விஜய் மில்டன் சாரும் ஒருவர். ரொம்ப சந்தோஷம் சார்,
உங்ககூட 2005 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வொர்க் பண்ணினேன் , அதன் பிறகு சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பணிபுரிந்தது சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பா இந்த படத்துல, ராஜ்குமார் சார் இருக்காரு, சிங்கம் படம் பார்த்துட்டு சூர்யா அண்ணணுக்கு போன் பண்ணேன், படம் நல்லா இருந்தது சார், செம கமர்ஷியலா இருந்தது சார், என்று சொன்னேன்.
அப்ப சூர்யா சார் ஒன்ரு சொன்னாறு, அதை இங்கே பதிவு பண்ண விரும்புறேன். இதுபோன்ற படங்கள் ரொம்ப வருவதில்லை, அப்படி வந்தாலும் இதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். படம் ரொம்ப நல்லா
வந்திருக்கு. சூர்யா அண்ணே நீங்க சினிமாவுல எவ்வளவு பேஷனா இருக்கிங்க என்று தெரியும். நடிக்கிறது மட்டுமில்லாம, இப்ப படம் தயாரிக்கவும் செய்றீங்க. தரமான படங்கள் கொடுக்கணும் என்று உள்ளே வந்திருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இத எதுக்கு சொல்லவர்றேன்னா, இந்த படத்தை நாளு கேரக்டர்ஸ் கதையை நகர்த்தது. இதுல புலி வேஷம் போடுற ஒருவருக்கும், பாக்சர் ஒருவருக்கும் இடையே நடக்கும் மெண்டல் வார், மை மைண்ட் கேம், இதுபோன்ற விஷயங்கள் இந்த படத்துல டிராமாவா இருக்கும். கண்டிப்பா இந்த படம் என் கேரியர்ல சிறந்த படமாக இருக்கும்.
ராஜகுமாரன் சார் பற்றி சொல்லியாக வேண்டும். அவர இயக்குநராக பார்த்திருப்பீங்க, ஆனா ஒரு நடிகராக அவரே பார்க்காத ஒரு ராஜகுமாரனை இந்த படத்துல பார்ப்பீங்க. காமெடியனா சில படங்களில் பண்ணியிருக்காரு, ஹீரோவாக

அவரோட ஜானர் படங்களில் பண்ணியிருக்காரு. ஆனா, ஒரு நடிகராக அவர வேறு ஒரு கோணத்தில் இந்த படம் பார்க்க வைத்தது. நெறைய உழைக்க வேண்டி இருந்தது. பிஸிக்கலாகவும் சரி மெண்டலாகவும் சரி. நிறைய உழைத்திருக்கிறாரு. கோலி சோடா படத்திலையும் அப்படித்தான், நாளு பசங்க ஒரு தாதாவ அடிக்கறது கதை என்று
சொன்னால் காமெடியா இருக்கும், ஆனா அதை படமாக ரொம்ப சிறப்பாக காட்டியிருப்பாங்க. அப்படித்தான் இந்த படத்திலையும் எங்க ரெண்டு பேருக்கு இடையே நடக்கும் மேன் டூ மேன் பைட் சில்லியாக இருக்கும். ஆனால், இந்த
படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப பேசப்படும். அந்த அளவுக்கு உழைச்சிருக்கோம். அதற்கான பாராட்டு விஜய் மில்டன் சாருக்கும், மாஸ்டருக்கும் தான் போகணும். அத நாங்க ஈஸியா எக்ஸிகியூட் பண்ணிட்டோம், ஆனா அதற்கான
ஸ்டோரி போர்ட் கிட்டதட்ட ஒரு மாசமாக நடந்தது. ராஜகுமாரன் சாரோட பணி செஞ்சது சந்தோஷம். சுபிக்‌ஷா என்று

இந்த படத்துல ஆர்டிஷ்ட்டுங்க கூட வேல செஞ்சது சந்தோஷம்.
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்னனா, நாம நல்ல படம் பண்ண தான் போராடுறோம் , சக்ஸஸ் படம் பண்ண தான் போராடுறோம், ஆனா நல்ல படம் பண்ணாலும் சில படங்கள் சரியாக போவதில்லை. என்னோடு விளையாடு படம்
கூட அப்படி தான் அமைந்தது. நல்ல தியேட்டர் கிடைக்கல, சரியான விளம்பரம் இல்ல, ஆனா அது முடிந்து போன விஷயம். ஆனால், இந்த படத்திற்கு அனைத்தும் சரியான முறையில் கிடைச்சிருக்கு. 2டி நிறுவனத்திடம் போய்
சேர்ந்திருக்கு, அவங்க இந்த படத்த ரொம்ப நல்ல முறையில கொண்டு போய் சேர்ப்பாங்க. சூர்யா அண்ணாவுக்கு நன்றிகள். ராஜசேகர் சாருக்கு நன்றி. ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த படம் அழகானவர்கள் கையில் சேர்ந்திருக்கு,
சரியான டைம்ல. மார்ச் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. பத்திரிகையாளர்களின் சப்போர்ட் வேண்டும், நன்றி.

இயக்குனர் மற்றும் நடிகர் ராஜா குமாறன் பேசுகையில் :

என்னை இந்த படத்துல நடிக்க விஜய் மில்டன் சார் கூப்பிட்டபோது, நான் நடிக்கிறதெல்லம் சரி சார், படம் வியாபாரம் ஆகுமா என்றேன். அப்ப அவர் சொன்னது, ராஜகுமாரன் சார், நம்மை நாமே நம்பணும், நம்பல நம்ப நம்பாம
மத்தவங்க நம்பனும் என்று எதிர்ப்பார்த்த எப்படி. எனக்கு நம்பிக்கை இருக்கு, அந்த கதைய நான் எடுக்கனும் நீங்க நடிக்கனும் , நான் முழுசா நம்புறேன் என்றார் . நான் முதல்ல என்னை நம்புறேன் நீங்களூம் உங்கள நம்பணும் என்றார்.
பிறகு அவருக்கு முழுசா சப்போர்ட் பண்ணனும் என்று நினைத்தேன். சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு போய்விடுவேன்.
இந்த மாதிரி தான் நான் சப்போர்ட் பண்ணினேன். மற்றபடி எல்லாமே அவர்தான் செய்தார்.அவரோட நம்பிக்கை ஜெயிச்சிருக்கு. ஒரு மேஜிக் மேடை போல தெரிகிறது. படத்த பார்த்ததும் சூர்யா சாருக்கு பிடிச்சிருச்சி என்று சொன்னார். இன்று சூர்யா சார் இந்த படத்த விட்டுவிட கூடாது என்று சொன்னார். அந்த அளவுக்கு
கண்டண்ட் இருந்தது என்று சொன்னார். விஜய் மில்டனின் நம்பிக்கை ஜெயிச்சிருக்கு. இது ஒரு மேஜிக் தான். மிகுந்த மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த படத்தோட ஆரம்ப கட்டமும், இதோட பயணமும், இப்ப 24 ஆம் தேதி ரிலீஸ் என்று வந்திருப்பதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னோடு நடித்த இளம் நாயகன் பரத், எந்த காம்ப்ளக்ஸும் இல்லாமல் என்னோடு நடித்தார். சுபிக்‌ஷா, ராதிகா பிரசித்தா, ஏ.வெங்கடேஷ் சார், மிக சிறந்த நல்ல இயக்குநர் நல்ல மனிதர், அவரோடு பணியாற்றும் போதும் நிறையா
கற்றுக்கொண்டேன். அவரோட ஒரு சீன்ல நடிச்சேன். அந்த சீன்கு அவர் டப்பிங் பேசிய போது, நான் டப்பிங் பேசினேன், அப்போது தான் தெரிந்தது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று. சுப்ரீம் சுந்தர் சார், அவருக்கு என்ன வித்தை தெரியுமோ அதையெல்லாம் என் மீது திணித்து என்னை வேறு மாதியாக மாற்ற முயற்சி செய்தார். புலி
மாஸ்டர் செந்தில், ஆர்ட் டைரக்டர் ஜனா அவரது பணியும் சிறப்பாக இருந்தது. ரொம்பவே எதார்த்தமாக இருந்தது.

அது ஒரிஜினலோ என்று நினைக்கும்படி தான் இருந்தது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், வணக்கங்கள் நன்றிகள்.
சூர்யா சாருக்கு ரொம்ப நன்றி இந்த படத்த வெளியிட, விரைவில் வெற்றி விழாவில் சந்திப்போம், நன்றி.

நடிகர் சூர்யா பேசும் போது,

“கடுகு ஆடியோ ரிலீஸ் வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இது வந்து 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆரம்பித்தது
என அனைத்தும் புது அனுபவம் தான் கொடுத்திருக்கு. இப்ப தான் வீடு கட்டியிருக்கோம். எல்லோரும் ஒண்ணா இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் அப்பா அம்மா, கார்த்தி அனைவரும் ஒரே இடத்தில இருப்பது சந்தோஷமாக
இருக்கிறது. இது அனைத்தும் சினிமா கொடுத்தது. இங்க இருக்கிற அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் சினிமாவுல வாழ்க்கை கிடைச்சிருக்கு. சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு
பதில் சொல்வது போலதான் 2டி எண்டர்டெயின்மெண்ட்-ஐ நான் பார்க்குறன். நான் அல்லாத படங்களையும் வெளியே கொண்டு வரவேண்டும் , நல்ல படங்களையும் ஆடியன்ஸ்க்கு ரீச் பண்ண வைக்கனும். ட்ரீம் வாரியர், பொட்டென்சியல்,
ஸ்டுடியோ க்ரீன் என்று இருந்தாலும் நான் நேரடியாக பண்ணனும் என்று தோனுச்சு அதனால தான் 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். பசங்க 2, 36 வயதினிலே
என்று படம் தயாரித்தோம். எப்பவுமே சின்ன பட்ஜெட் படத்துல மனசார விஷயம் நடக்கும். என்ன தடங்கள் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்தி காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும்.
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா, ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகனும் என்று எனக்கு ஆசை வந்தது. அதனால் அதுபோன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துக்கொள்ள
வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்.

இவர் நடிகர், கேமிராமேன் என்று தாண்டி நல்ல நண்பர். எனக்கும் என்னோட நட்பு வட்டாரத்த புதுப்பிச்சக்கணும். நல்ல நண்பர்களாக இருந்தோம், இன்னும் நெருங்க கடுகு ஒரு வாய்ப்பாக இருந்தது. படம் பார்த்தோம் நல்ல படம். ரிலீஸ் பண்ண முடிவு செய்தோம். இது ஒரு புது முயற்சி, இதற்கு நான் ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கேன். அழகான கெமிஸ்ட்ரி நடத்திருக்கு, ஒரு இயக்குநர் தயாரிப்பாளர், இங்கு உள்ள நடிகர்கள் அனைவரும் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் தான் தெரிவாங்க. கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும். அப்படி
சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் நந்தா போன்ற படங்களில் நடித்தேன். சில படங்கள் மனசார பண்ணனும் என்று தோன்றும். அந்த வரிசையில் கடுகு ஒரு படமாக தெரிந்தது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் படம் பிடிக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள் போய்விடுவோம். யுனிக் படத்தை யார் எடுத்தாலும் ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க, சின்னது பெருசு என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள். நாங்க மட்டும் சொல்வது இல்லாம, மீடியாவாகிய நீங்கள் சொல்வதையும் நம்பி வரவேற்பார்கள். அந்த வகையில் கடுகு படத்தையும் நிச்சயம் கைதட்டி வரவேற்ப்பார்கள். பாடல்கள், பைட், காமெடி என்று அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும். பரத் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டாறு என்று எனக்கு சர்பிரைசாக இருந்தது. அந்த அளவுக்கு இதில் ஒரு வேடமாக அவர் உழைத்திருக்காங்க.இந்த படத்துக்கு நாங்க ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கோம், மற்றபடி படத்துல பங்குபெற்றவர்கள் தான் காரணம்.
இந்த நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் நடக்கிறது. இதில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டுக்கள், அவரது சேவைகளுக்கு பாராட்டுக்கள். நான் ஒருவரை சந்தித்தேன், அப்போது அவர் உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்க என்றார். அப்போது எனக்கு மற்றவர்கள் மார்க் போட்டதை காட்டிலும் நான் குறைவாக மார்க்
போட்டேன், அதைப் பார்த்த அவர், மத்தவங்க உங்களுக்கு அதிகமாக மார்க் போட்டிருக்க நீங்க ஏன் குறைவாக போட்றீங்க, என்று கேட்டார். உங்கள உங்களுக்கு பிடித்தால் தான் மற்றவர்களுக்கு பிடிக்கும், என்பது போல மாற்றினார்கள். அதுதான் இந்த படமும். பண்ணுவதற்கு. அதுமட்டும் அல்ல, இன்னும் பல விஷயங்கள் இருக்கு. கடுகு

நல்ல படம், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். நன்றி.”
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *