Story : Shruti Haasan to produce Lens director’s next
ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’
தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.
திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை உருவாக்கி, அதில் தன் பாணியிலான பயணத்தைத் மேற்கொண்டு, பல மரபுகளை உடைத்தெறிந்து, புதிய வடிவத்தை உருவாக்கி கலை சேவை செய்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரின் வித்தியாசமான தேர்வு தான் லென்ஸ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் தயாரித்து வெளியிடுகிறார் ஸ்ருதிஹாசன்.
‘லென்ஸ்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அத்துடன் இவரது படத்தைப் பார்த்த அனைவரும் இவரின் கதை சொல்லும் பாணியை வெகுவாக ரசித்து பாராட்டினர். அதிலும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, எளிமையான பாணியில் கதையை சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருந்தது. இந்த படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.
இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே இது படமாக்கப்படவிருக்கிறது. ஏனெனில் திரைக்கதை , வசனம் மற்றும் குறைந்த பட்ச தொழில்நுட்ப கருவிகளால் ஒரு உண்மையான காட்சியை திரையில் பிரதிபலிக்க முடிவதில்லை.
இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது,‘ உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள்,தாங்கள் உருவாக்கும் கலை படைப்பை முடிந்தவரை பார்வையாளர்களுக்கு உண்மைக்கு அணுக்கமாக இருக்கும் வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’, உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது. இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது. அதாவது திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பின் போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள் கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது.’ என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நிறுவனத்தைப் பற்றி அவர் பேசும் போது,‘ இது எப்படி நடந்தது என்று நினைத்துப் பார்க்கும் போது எனக்கு கனவாகத்தான் தெரிகிறது. நான் சரிகா மேடத்துடன் ஒரு நிமிடம் தான் பேசினேன். அவர்கள் என்னுடைய திறமையை உணர்ந்து கொண்டு இந்த நிறுவனத்தில் உடனடியாக வாய்ப்பளித்தார்கள். என்னுடைய திறமை மற்றும் சினிமா பற்றிய என்னுடைய கோணத்தின் தன்மையை நம்பும் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். உலக சினிமாவின் மொழியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த படைப்பில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன். உலகம் முழுவதும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’யை நல்லவிதமாக வரவேற்பார்கள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். உலக முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் எமது பயணத்தை பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறோம்.’ என்றார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளரான நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்,‘ எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவராசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது. இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத்தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது. நாங்கள் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இயக்குநரை பாராட்டினோம். அத்துடன் அவரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும் போது சவாலை கொடுக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம். இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம்.’ என்றார்.
Shruti Haasan to present Lens director’s next
Under her banner Isidro Media, Shruti is all set to present director Jayprakash Radhakrishnan’s next titled The Mosquito Philosophy
Always known to follow her own path and steering clear of convention actor, musician Shruti Haasan proves yet again why she’s referred to as the “rule breaker”. Under her production banner Isidro Media, Shruti is all set to produce and present the latest works of director Jayprakash Radhakrishnan – The Mosquito Philosophy
JP, as the director is fondly called, has been the man behind one of the most talked about features titled Lens which traveled the festival circuit and created tremendous buzz around it. All set to raise the bar with his next, JP will be seen showcasing a film defined by the idea of minimalism and basic filmmaking and story telling techniques.
Despite being in Tamil, the film’s story has universal appeal with a very real scenario at it’s core and true and the film is shot
with basic storyline no scripted dialogues and bare minimum equipment and crew to ensure the most real showcase of life is replicated on screen.
Talking about his next film, director JP says, “Film makers the world over have struggled hard to make films that are as close to reality as possible to ensure the art they create connects seamlessly with the audience. The Mosquito Philosophy, born out of the quest to showcase a real life and real time narrative, is an interrogation of a society caught between the throws of tradition and modernity seen through the story of 4 friends. The film is shot with a basic idea of conversation without scripted dialogues in the most minimalistic way. Through the process of making this film I realised the power of spontaneity; it makes even the smallest moments alive and truthful”
Ask him about associating with Shruti and Isidro Media and he says, “It’s almost surreal when i think of how this happened. One minute I was talking to Sarikaji about life in general and this film and next thing I know, Isidro Media comes on board to present my film. I’m so happy to have partnered with a team that believe in my talent and my vision and have contributed to being a part of the change in the cinematic language of India and the world. Together we look forward to taking Mosquito Philosophy across the globe and share our journey with audiences the world over.”
Talking about presenting JP’s latest work of unique art as producer, Shruti says, “Our belief at Isidro is to present extremely interesting, edgy and different kinds of content. It can be content across various formats just as long as they further the creative process and make it possible for people to experience world class storytelling. When we saw Mosquito Philosophy and after having seen JP’s last works especially his much acclaimed film Lens, we knew we had found the right person to associate with. He has a very edgy vision to creatively showcase even the simplest stories. It’s fantastic to work with someone who is courageous in offering new content that challenges conventional thinking . We are really excited to present this film under the Isidro banner and hope this is the start of a long term working relationship.”