full screen background image
Search
Monday 9 February 2026
  • :
  • :
Latest Update

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான் ,Movie Stills

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான் ,Movie Stills

சரளமாக தமிழ் பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இவரின் அப்பா கர்நாடகா என்றாலும் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம் கன்னடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மீதும் தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராம் .

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கன்னட படம் raja loves radhe வெற்றிகரமாக 3வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறாராம் தமிழ் அதிக படங்கள் நடிக்க ஆசைப்படும் இவர் மாடர்ன் பெண்ணாக நடிப்பேன் ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்கிறார் . நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.

இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்குகிறார்

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,
நடனம் தீனா மற்றும் விஜி.

இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படதினை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *