full screen background image
Search
Wednesday 17 April 2024
  • :
  • :

Actress Sema Arthana Interview

Actress Sema Arthana Interview

இளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை அர்த்தனா.

தொண்டன் மூலம் அறிமுகமாகி இப்போது செம படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அர்த்தனாவுடன் ஒரு தேநீர் சந்திப்பில்….

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள் ?

சின்ன வயசிலிருந்தே நடிப்பு எனக்கு பிடிச்ச விசயம். அப்பா அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம் தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் அப்பா அம்மா செல்லம். சின்ன வயசு ஸ்கூல் படிக்கும் போதே டிராமா, கல்ச்சுரல் எல்லாதிலும் நடிப்பேன். ஸ்கூல் முடிக்கும்போதே நான் டீவியில் தொகுப்பாளராக பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

காலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப்படத்துல சுரேஷ் கோபி சார் கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப்பிறகு ஒரு தெலுங்குப்படம் பண்ணினேன். அப்புறம் தான் சமுத்திரகனி சார் மூலமா தொண்டன் படம் வாய்ப்பு கிடைத்தது.

இப்ப தமிழில் மூணு படங்கள் பண்ணிட்டேன்.

மூன்று மொழிகளில் படம் பன்ணிட்டீங்க எந்த இண்டஸ்டரி உங்களுக்கு பிடிச்சிருக்கு ?

அப்படி எதுவும் இல்லை. நானே ரொம்ப சின்னப் பொண்ணு. சினிமாவுக்கு புதுசு. என்ன மாட்டி விடாதீங்க..

ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொண்னு ஸ்பெஷல் தான். நான் தமிழ்ல தான் மூணுபடம் பண்ணிருக்கேன். மத்த மொழில ஒரு படம் தான் பண்ணிருக்கேன். தமிழ்தான் எனக்கு நெருக்கம்.

செம பட அனுபவம் எப்படி இருந்தது ? ஜீ.வி.பிரகாஷுடன் நடித்த அனுபவம் ?

ஜி.வி.பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர் ஒரு பெரிய நடிகர் போல இல்ல நல்ல பேசினாரு நிறைய எங்கரேஜ் பண்ணாரு. செம படம் பத்தி சொல்லணுமுன்னு நிறைய அனுபவம் கத்துக்கிட்டேன் செம படத்துல நிறைய புடிச்சியிருந்துச்சி ஷூட்டிங் பண்ண இடம் மாட்டு வண்டி நிறைய சொல்லலாம்.

செம உங்களுக்கு எத்தனாவது படம் ?

உண்மையா சொல்லனும்னா செம எனக்கு மூணாவது படம். வெண்ணிலா கபடி குழு 2 ல தான் முதல்ல கமிட் ஆனேன். அந்த படம் இப்ப ரிலீஸ்க்கு ரெடியா இருக்கு.

முதல்ல தொண்டன் படம் பண்ணன் அப்புறம் தான் வெண்ணிலா கபடி குழு 2, அப்புறமா பண்ணின படம் தான் செம.

செம படம் என்ன நிறைய இடத்துக்கு கொண்டு போயிருக்கு. செம படம் மூலமா கிடைச்ச வாய்ப்புதான் கடைக்குட்டி சிங்கம் அதுல நான் மூணு ஹிரோயின்ல ஒருத்தரா பண்றேன்.

கடைக்குட்டிச் சிங்கம்ல என்ன ரோல் பண்றீங்க ? அந்தப்படம் எப்படி வந்திருக்கு ?

ஷூட்டிங் முழுக்க முடிஞ்சிடிச்சு அதில மூணு ஹிரோயின் நடிச்சிருக்கோம். நானும் ஒரு கேரக்டர். இது முழுக்க கிராமத்துல வாழுற ஒரு குடும்பத்த பத்தின கதை. ரொம்ப நாளுக்கு அப்புறம் குடும்ப பிரச்சனைகள பேசுற படமா, குடும்பத்தோடு பாக்குற படமா இது இருக்கும். பாண்டிராஜ் சாரோட பசங்க பட மாதிரி ஒரு எமோசனல் டிராவல் இதுல இருக்கும். படத்துல நான் கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இப்போதைக்கு இது மட்டும் சொல்லத்தான் அனுமதி. படம் வர்றப்ப இன்னும் நிறைய பேசலாம்.

படத்தில் மூணு ஹிரோயின். ஈகோ, சண்டைகள் எதுவும் வரலையா ?

எனக்கு எப்பவும் வராது, யார் என்ன பண்ணினாலும் நம்ம வேலையை கரைக்ட்டா பண்ணிட்டா எந்தப்பிரச்சனையும் இல்ல. நான் ரொம்ப அமைதி. எனக்கு எப்பவும் ஒரு நல்ல நடிகையா பேர் எடுக்கனும். எமோசன கரக்ட்டர் பண்ற நடிகைன்னு பேர் எடுத்தா போதும். அது மாதிரி ஹிரோயினா நான் பண்ணனும்னுகிறதுதான் என்னோட ஆசை. இப்ப ஈகோ, சண்டைனு என்ன மாட்டி விடாதீங்க..

உங்களுடைய கனவு ரோல் , கேரக்டர் எதுவும் இருக்கா ?

நிறைய இருக்கு. எத சொல்றது. எல்லாமே சொல்லலாமா?. நான் புதுசு. நான் சொன்னா ரொம்ப பெரிசா தெரியும். எனக்கு சோசியல் கருத்துக்கள் பத்தி பேசற படத்துல நடிக்கனும். ஒரு பயாக்கிராஃபி படத்தில நடிக்கனும். ஒரு வரலாற்றுப்ப்டத்தில் நடிக்கனும். அப்புறம் ரொம்ப நாள் ஆசை மனநலம் பத்தி நிறைய பேசுற அத சரியா அணுகுற ஒருபடத்தில கண்டிப்பா ஒரு ரோல் பண்ணனும். இன்னும் சொல்லிக்கிட்டே இருப்பேன். இப்போதைக்கு இது போதுமே!

சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் பத்தி இப்போ வெளிப்படையா பெண்கள் பேசுறாங்க, அதப்பத்தி உங்களுடைய கருத்து என்ன ?

ஆமா. வெளிப்படையா பேசப்படுறதே நல்லது தானே!. இது இந்தத்துறையில் மட்டும் இல்ல. எல்லாத்துறையிலும் இருக்கு. எனக்கு இது வரை இந்த மாதிரி நடந்ததில்லை. அதற்காக இது சினிமாவில் கிடையாதுனு சொல்லல. இருக்கலாம். பெண்கள் வெளியில் வரும்போது இந்த மாதிரி நடப்பது வருத்தம் தான். ஆனால் உங்கள் சம்மதம் இல்லாம உங்கள யாரும் எதுவும் பண்ணிட முடியாது. எப்படி நோ சொல்வது என்பது எனக்குத் தெரியும். மறுக்க தெரிந்தால் போதும் இதைத் தவிர்க்க முடியும். நோ சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். இதைத்தாண்டித்தான் பெண்கள் முன்னேற வேண்டும்.

நீங்கள் இதுவரை நடித்த படங்கள் அனைத்திலும் குடும்ப்பப் பெண்ணாக நடித்திருக்கிறீர்கள். கவர்ச்சியாக நடிப்பீர்களா ? மாடர்ன் பெண்ணாக நடிப்பீர்களா ?

எனக்கே ஒரே மாதிரி ரோல் பண்ணுவது போல் தான் இருக்கிறது. இதில் மாட்டிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து மாறி நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. மாடர்ன் ரொல்கள் பண்ண நான் ரெடி. கவர்ச்சி என்பது பார்ப்பவரை பொருத்தது. நான் எனக்கு செட்டாகிற உடைகள் போட்டு நடிப்பதில் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் ரெடி.

உங்களுடைய அடுத்த புராஜக்ட்ஸ் பத்தி ?

அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகுது.
வென்னிலா கபடி குழு, கடைக்குட்டி சிங்கம் இரண்டும் ரிலீஸிக்கு ரெடி. இப்ப அடுத்து ரெண்டு படங்கள் பேசிட்டு இருக்கேன். இதைத்தவைர மலையாளப்படமும் பேசிக்கிட்டு இருக்காங்க.. கூடிய சீக்கிரம் சொல்றேன்..
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *