full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர். இந்திரா இன்று காலமானார் !!!

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர். இந்திரா இன்று காலமானார் !!! RIP

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும் , டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா ​வயது ​- 65 இன்று காலமானார். இவர் கொஞ்சும் குமாரி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார்கள். இவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த “ பெற்றால் தான் பிள்ளையா “ நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக படத்தில் நடித்தார். ஹலோ Mr.ஜமீன்தார் படத்தில் M.R.ராதாவுக்கு ஜோடியாக நடித்த அனுராதா மேலும் கந்தன் கருணை , சிந்து பைரவி , சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்த “ மன்னன் “ , “ பணக்காரன் “ போன்ற 250-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கடைசி படம் “ கிரிவலம் “ , இப்படத்தில் இவர் நடிகர் ரிச்சர்டின் பாட்டியாக நடித்துள்ளார்.இவருடைய தந்தை கே. எஸ். ராமசாமி பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர். நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர். இந்திரா அவர்களின் வீட்டிற்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் , துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்னாருடைய இறுதிசடங்கு நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறும்.

முகவரி :M.no.86
Name K.R.Indira
Old no.6, New No.8A, Chokkalingam Nagar,
Vellala Teynampet.
Ph : 9380012226




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *