அக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கடராமன் !
நடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் “ சொச் பாரத் ” பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன்.
நடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும் , புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதை பற்றி நாம் அவரிடம் கேட்டபோது , “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல் , எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் , உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் “ ஹார்பிக் “ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்.
தமிழில் இரண்டு படங்களிலும் , மலையாளத்தில் “ மை ஸ்டோரி “ எனும் படத்தில் ப்ரிதிவி ராஜ் , பார்வதி உடன் சிறப்பு தோற்றத்தில் கணேஷ் வெங்கடராமன் நடித்துள்ளார்.
Ganesh Venkatram joins hands with Akshay Kumar
Far-famed for his Gentleman nature, Ganesh Venkatram has been highly appreciated for his decorous performance and neat screen presence. Now he has been appointed as brand ambassador for South ‘Swachh Bharat Campaign’ that is launched by Harpic. It is worth mentioning that Akshay Kumar has been doing the same for North region.
It is worth mentioning that Akshay and Ganesh had been the part of shooting two different ads in Mumbai. Sharing his moments with Akshay Kumar while shooting, Ganesh says, “Working with Akshay sir is really inspiring. Moreover, he is such a great man of inspirational means with choosing socially relevant issues, being a well disciplined person, a teetotaller and fitness genius. So working with him was really a great means of celebration as an actor.
Today, cleanliness has become the need of hour and it must start from our homes to ensure that the country is clean as a part of Swach Bharath campaigns.”
Ganesh Venkatram is currently working on couple of Tamil movies and is awaiting the release of his upcoming film ‘My Story’ with Prithviraj and Parvathi in lead roles.