full screen background image
Search
Friday 17 January 2025
  • :
  • :

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா
பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012 ல் வெளிவந்த ” த பாடி ” என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013 ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது.

பாலிவுட் படவாய்ப்பு குறித்து கேட்டபோது, இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் வேதிகா.

வேதிகா தேர்வு செய்யப்பட்டது குறித்து, நாடு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பல ஆடிஷன்களுக்கு பிறகு தங்களிடம் வேதிகா சிக்கியதாக கூறுகிறார் இயக்குனர் ஜித்து ஜோசப்.

அப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அவருக்கு அழகாக பொருந்துகிறது என்றும் இம்ரான்- வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்றும் இயக்குனர் கூறுகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் மும்பையில் தொடங்கியது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரீஷியசில் விரைவில் தொடங்கவுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *