full screen background image
Search
Wednesday 17 April 2024
  • :
  • :

Pakka Movie Review

கதை: ஒரே கிராமத்தைச் சேர்ந்த டோனி குமார் எனும் தோனி ரசிகர் விக்ரம் பிரபுவுக்கும் , ரஜினி ரசிகை ரஜினி ராதா எனும் நிக்கி கல்ராணிக்கும் யாருடைய தலைவர் பெரிய ஆள் ? என்பதில் மோதல் கூடவே காதல். அந்தக் காதல் விதி வசத்தால் கல்யாணத்தில் முடியாமல் ., கைகூடாமல் போகிறது. அதில் வெறுத்து போய் சென்னை வரும் டோனி குமார் -விக்ரம் பிரபு.,பொம்மை விற்கும் பாண்டி எனும் மற்றொரு விக்ரம் பிரபுவை சூழ்நிலையால் பிரிந்திருக்கும் அவரது காதலி நதியா எனும் பிந்து மாதவியை எப்படி சேர்த்து வைக்கிறார் …. என்பது தான் “பக்கா” படத்தின் கதையும் களமும்!

”பென் கன்ஸ்டோரிடியம் ‘ பிரைவேட் லிமிடெட் ” டி. சிவகுமார் வழங்க ., எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு , நிக்கி கல்ராணி , பிந்து மாதவி , சூரி , சதீஷ் , ஆனந்த் ராஜ் , நிழல்கள் ரவி , சிங்கமுத்து , சிங்கம் புலி , ரவி மரியா , வையாபுரி ,இமான் அண்ணாச்சி , ஜெயமணி , கிருஷ்ணமூர்த்தி , முத்து காளை , சிசர் மனோகர் ,சுஜாதா , “நாட்டாமை” ராணி , சாய்தீனா…. இவர்களுடன் முக்கிய பாத்திரத்தில் இப்படத் தயாரிப்பாளர் டி. சிவக்குமாரும் நடிக்க, வெளி வந்திருக்கும் காமெடி படமான “பக்கா”வில் காமெடி எனும் போர்வையில் ஆரம்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொறுக்கி காசு குடு காமெடி , இமான் அண்ணாச்சி , சூரி இடம் பெறும் ராட்டினம் காமெடி பொம்மைக்கடை ஹெலிகாப்டர் காமெடி , அதே கடை முன் சிறுவர் சிறுமியுடன் சூரி அழும் காமெடி உள்ளிட்டவைகள் காமெடி யே அல்ல… கடியோ கடி என்பது கொடுமையிலும் கொடுமை.

கதாநாயகர் : டோனி குமார் , பாண்டி … என இரட்டை வேடங்களில் விக்ரம் பிரபு … தாங்கலைடா சாமி . விக்ரம் பிரபுக்கு யார் கதை கேட்பது ? இனி , அவர்கள் காதுகளை அடைத்திருக்கும் பஞ்சை எடுத்து விட்டு கதை கேட்கவும் ப்ளீஸ்.

கதாநாயகியர் : ரஜினி ராதாவாக நிக்கி கல்ராணியும் , நதியா வாக பிந்து மாதவியும் கவர்ச்சியாகவும் , குடும்ப பாங்கிலும் படம் முழுக்க வந்து போகிறார்கள் பாவம் ரசிகன் நொந்து போகிறான்.

காமெடியன்ஸ் :சூரி , சதீஷ் … என ஒன்றுக்கு இரண்டு காமெடியன்கள் படத்தில் இருந்தும் , புளித்துப் போன ஜோக்குகளால் ரசிகனுக்கு சிரிப்பு மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. காதுகளில் இரத்தம் வழிகிறது .

பிற நட்சத்திரங்கள் : நாட்டமையாக ஆனந்த் ராஜ் , அப்பா ஜமீந்தாரா க நிழல்கள் ரவி , கோவில் குருக்களாக சிங்கமுத்து , சிங்கம் புலி , ரவி மரியா , வையாபுரி ,இமான் அண்ணாச்சி , ஜெயமணி , கிருஷ்ணமூர்த்தி , முத்து காளை , சிசர் மனோகர் ,சுஜாதா , “நாட்டாமை” ராணி , சாய்தீனா…. உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் மொத்தமும் இயக்குனர் சொன்னதை செய்து ரசிகனை வதைத்திருக்கிறது!

தொழில்நுட்பகலைஞர்கள் : சசிகுமாரின் படத்தொகுப்பில் , அவரது கத்தரி க்ளைமாக்ஸ் தவிர்த்து மொத்தப் படத்தையும் கத்தரித்து போட்டிருக்கலாம் ….

எஸ். சரவணனின் ஒளிப்பதிவில் ,.அடிக்கடி வரும் கோவில் திருவிழா காட்சிகள் சிறப்பு பதிவு என்றாலும் அதை கோவில் விழா வீடியோக்களிலும் டி.வி.நியூஸ் ஆன்மிக செய்திகளிலுமே இன்றைய சூழலில் காண முடிகிறதே எனும் சலிப்பும் ஏற்படுகிறது.

சி.சத்யாவின் இசையில் , , “ஓல வீடு நல்லால ….” , “எங்க போன … ” , “இழுத்த இழுப்புக்கு ….” , ” கண்ணுக்குள்ள ….” , “டூப்பு சிங்காரி … ” உள்ளிட்ட பாடல்கள் ஒரளவிற்கு ஆறுதல்! தேறுதல்!

பலம் : மொத்தப்படத்திலும் க்ளைமாக்ஸ் மட்டும்!

பலவீனம் : க்ளைமாக்ஸ் தவிர்த்த மொத்தப் படமும்!

இயக்கம் : எஸ்.எஸ்.சூர்யாவின் இயக்கத்தில் “நாங்கள்ளாம் திருவிழாவுல பிழைப்பு நடத்தறவங்க நீங்க இந்த திருவிழாவை நடத்துறவங்க ….”, “அவ என்ன லவ் பண்றத விட .,அவள நான்., அதிகம் லவ் பண்றேன் …. அதனால் தான் அவ வாழ்க்கை நல்லா இருக்க ஆசைப்படுறேன் .. ” “உன்னை செல்லுக்குள்ள வைத்து பார்க்கிறத விட என் கண்ணுக்குள்ள வைத்து பார்ப்பது தான் என் விருப்பம்.” என்பது உள்ளிட்ட வசனங்கள் திரும்பி பார்க்க வைக்கின்றன என்றாலும் , காமெடி எனும் போர்வையில் ஆரம்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் , இமான் அண்ணாச்சி , சூரி இடம் பெறும் ராட்டினம் காமெடி , பொறுக்கி காசு குடு காமெடி, பொம்மைக்கடை ஹெலிகாப்டர் காமெடி , அதே கடை முன் சிறுவர் சிறுமியுடன் சூரி அழும் காமெடி …. உள்ளிட்டவை காமெடியாகவே அல்லாது . கடியோ கடியாக ரசிகனை வெறுப்பேற்றுவதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.

அதே மாதிரி ., பிந்து மாதவி தேடி அலையும் ., பொம்மை பாண்டி – விக்ரம் பிரபுவிடமும் , பிந்து விடமும் இந்த காலத்தில் செல்போன் கூட கிடையாதா ? என்னும் கேள்விகளும் சாதாரண ரசிகனுக்கும்எழுவதை இயக்குனர் தவிர்த்திருக்க வேண்டும்.

பைனல்”பன்ச்” : எஸ்.எஸ். சூர்யாவின் இயக்கத்தில் , வெளி வந்திருக்கும் காமெடி படமான “பக்கா’ – பலே ‘பக்கா’வாகவும் இல்லை… செம ‘கிக்கா’கவும் இல்லை ..!”
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *