வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 7 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
வேல்ஸ்பல்கலைக்கழக 7 ஆம் ஆண்டுப்பட்டமளிப்பு விழா பல்லாவரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 1 ஆம் நாள் 2017 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் மாண்பமை வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி.தமிழரசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் பல்கலைக்கழக ஆண்டறிக்கையை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் விண்வெளித்துறைச் செயலரும் இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவருமாகிய திருமிகு
A. S. கிரண்குமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்து விழாப்பேருரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவரும் இந்திய அணுசக்தி துறையின் செயலருமாகிய பத்ம ஸ்ரீசேகர்பாசு அவர்களுக்கும் புகழ் பெற்ற அறிவியல் அறிஞரும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (CVRDE) இயக்குநருமாகிய டாக்டர் P. சிவக்குமார் அவர்களுக்கும் இந்தியத்திரைப்பட நடிகரும் இயக்குநரும் சமுதாய சிந்தனையாளருமான திருமிகு S.சத்யராஜ் அவர்களுக்கும் மதிப்புறுமுனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் டாக்டர் ஐசரிகே.கணேஷ், பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான துணைத்தலைவர் பேராசிரியர் A.ஜோதிமுருகன், கல்விக்கான துணைத்தலைவர் முனைவர் ஆர்த்திகணேஷ், துணைவேந்தர் பேராசிரியர் TP. தமிழரசன், பதிவாளர் பேராசிரியர் A.R. வீரமணி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் யு. ஜோசப்துரை, பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி அலுவல குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக்கல்வியாண்டில் 31 தங்கப்பதக்கங்களும் 24 வெள்ளிப்பதக்கங்களும் 22 வெண்கலப்பதக்கங்களும் மேலும் 1305 இளநிலைப்பட்டங்களும் 405 முதுநிலைப்பட்டங்களும் 113 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும் 49 முனைவர்பட்டங்களும் என 1872 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
Seventh Annual Convocation of Vel’s University
The Seventh Annual Convocation of Vels University was held on 1st March 2017 at the University main campus of Pallavaram at 3:30 PM. Dr.Ishari K.Ganesh, Chancellor of the University, presided over the convocation function.
Prof. Dr.V.Thamizh Arasan, Vice Chancellor, welcomed the gathering and highlighted the achievements of the University.
The Chief Guest of the function was Shri A. S. Kiran Kumar, Secretary, Department of Space, Govt. of India & Chairman, Indian Space Research Organisation (ISRO), Bangalore. He delivered the Convocation Address and distributed the degree certificates to the graduands.
Honoris Causa degree was conferred on Padma Shri Sekhar Basu, Chairman, Atomic Energy Commission and Secretary to Government of India, Department of Atomic Energy, Dr. P. Sivakumar, Distinguished Scientist (DS) & Director, Combat Vehicles Research and Development Establishment (CVRDE), and Thiru. S. Sathyaraj, Indian Film Actor, Director and Social Activist by the Chancellor Dr.Ishari K.Ganesh, in the presence of Dr.A.Jothi Murugan, Vice-President (P&D), Dr.Arthi Ganesh, Vice-President (Academic) ,Dr.V.Thamizh Arasan, Vice-Chancellor, Dr.A.R.Veeramani, Registrar, Dr.Joseph Durai, Controller of Examinations, Members of Board of Management and Academic Council, of the University.
The University conferred degrees to 1872 graduands, which includes 31 Gold, 24 Silver, 22 Bronze Medalists, 1305 UG, 405 PG, 113 M.Phils and 49 Ph.Ds.