சென்னையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ‘நியூ ஹோப் மருத்துவமனை’ விளங்குகிறது . சென்னை ஈகா திரையரங்கு அருகில் கேஎம் சி எதிரில் உள்ள இம் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ‘ப்ரெய்ன் அண்ட் ஸ்பைன் சென்டர்’ நவீன வசதிகளுடன் மருத்துவ சேவை புரிந்து வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள் .
மருத்துவ மனையின் தலைவரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஏ.சைமன் ஹெர்குலிஸ் இது பற்றிக் கூறும்போது
“சென்னையில் அமைந்துள்ள நியூ ஹோப் மருத்துவமனை குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளித்து வருகிறது. இங்கு மூளை , தண்டுவடம் சார்ந்த அனைத்து நரம்பியல் நோய்களுக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
ஸ்ட்ரோக் , பக்கவாதம் போன்றவற்றுக்கு மருத்துவத் தீர்வு காணப்படும் . இங்கே மூளை தண்டுவட பிரச்சினைகளை தீர்க்க இன்று அதிநவீன கருவிகள் வந்து விட்டன. அவை மூலம் ஆபத்தில்லாத பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இங்கு தமிழ்நாடு , ஆந்திரா மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா ,அஸ்ஸாம் , மேற்கு வங்காளம் ஆகியவற்றிலிருந்தும் சிகிச்சைக்கு வருகிறார்கள். மலேசியா , ஸ்ரீலங்கா , மற்றும் துபாய் போன்றஅரபு நாடுகளிலிருந்தும் வருகிறார்கள்.
காரணம் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை வழங்குகிறோம்.” என்கிறார்.
இங்குள்ள நவீன சிசிச்சை பற்றிக் கூறும்போது , ” இங்கு நியூரோ எண்டோஸ்கோபி முறையில் நுண்துளை மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதே போல நுண்துளை தண்டுவட சிசிச்சையும் செய்யப் படுகிறது. முக்கிய அறுவை சிகிச்சையின் போது தவறு நேராமல் கண்காணிக்க இண்ட்ரோ ஆபரேட்டிங் மானிட்டரிங் சிஸ்டம் செயல்படுகிறது. கட்டிகளை அகற்றும் போது
முக்கிய நரம்புத் தொகுப்பு களுக்கு அருகில் சென்றாலே இது எச்சரிக்கை சமிக்ஞை தரும் . இதனால் பாதுகாப்பான அறுவை சிகிச்சை உறுதி செய்யப் படுகிறது. இங்கு மூளை , தண்டுவடம் மட்டுமல்ல கல்லீரல் , மண்ணீரல் , கணையம் பெருங்குடல் போன்றவற்றுக்கும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எல்லா அறுவை சிகிச்சைகளும் நிபுணர் குழு மேற்பார்வையில்தான் செய்யப்படுகிறது. ” என்கிறார் பாக்டர் சைமன் ஹெர்குலிஸ் .
மூளை , நரம்பு சார்ந்த பிரச்சினைகளை வராமல் தடுப்பது எப்படி. ?.
“இன்று மக்களின் வாழ்க்கை முறை மாறி விட்டது. சரியான உணவு முறை இல்லை. ஜங்க் புட் என்கிற ஆரோக் கிய மற்ற உணவுகள் புழங்குகின்றனர் .இவை உடலுக்குக் தீமை விளைவிப்பவை . உடல் இயக்கம் இல்லை. மன அழுத்தம் வேறு. இன்று ஐடி துறையில் சூரிய ஒளி படாமல் ஒரே இடத்தில் அமர்ந்து குனிந்த தலை நிமிராமல் பரபரப்பாக பணிபுரிகிறார்கள். இதனால் உடல் நலக்கேடும் வருகிறது. மன அழுத்தமும் ஏற்படுகிறது. அதுவே கழுத்து வலி , தலைவலி , என்று தொடங்கி ஸ்ட்ரோக் வரை போகிறது. இயற்கையான சரி விகித உணவு உண்டு சீரான தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்து உடல் நலத்தைக் கவனித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. மனதை இலேசாக வைத்து மன அழுத்தம் வராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ” என்கிறார்.
நியூ ஹோப் மருத்துவமனை நிச்சயமாக புதிய நம்பிக்கை தரும் இடமாகும்.