full screen background image
Search
Wednesday 6 November 2024
  • :
  • :
Latest Update

Guru Kalyan’s #MEMESONG

Guru Kalyan’s #MEMESONG

Youtube Link:

Facebook Link:
https://facebook.com/GuruKalyanMusicPage/videos/10156619739045559

வணக்கம். வெவ்வேறு காலகட்டங்களில் இசை கலைஞர்களின் பங்களிப்பு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாது, சமூக எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாகவும் இருந்து வருகிறது. திரைப்படங்களை தாண்டி, நான் சென்ற ஒரு வருட காலமாக இறையருளால் தனிப்பாடல்களையும் இசையமைத்து வெளியிட்டு வருகிறேன். இந்த ஆண்டு நான் வெளியிட்ட “மனிதா மனிதா எழுந்து வா” மற்றும் “ஜீரோ தாண்டா ஹீரோ” ஆகிய தனிப்பாடல்கள் இணையதளத்தில் வெகுவாக வரவேற்கப்பட்டது. அவ்வழியில் “மீம்ஸ் சாங்” என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளேன்.

“மீம்ஸ்” தனிமனிதர் மற்றும் இந்த தலைமுறை மீதும் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது, வெகு விரைவாகவும் சென்றடைகிறது. இது ஒரு மாடர்ன் மிமிக்ரி என்றே எண்ணுகிறேன். ஐ.டி மீம்ஸ், பி.பி.ஓ மீம்ஸ், கணவன் & மனைவி மீம்ஸ், என்று இதில் பல வகையான மீம்ஸ்கள் பயன்பாட்டில் இருப்பதை கண்டு வியப்படைந்தேன். ஜாதி மதங்களை தாண்டி இது அனைவரையும் சென்றடைந்து மகிழ்ச்சியடைய வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது. போலியான மீம்ஸ் செய்திகள் வந்தால் அதனையும் மீம்ஸ்-ஆக எழுதி அதையும் ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள். மீம்ஸ் மிகவும் அருமையான வளர்ச்சி, அதனை நம் சமுதாயம் மேலும் அழகுற பயன்படுத்திக்கொண்டால் நமது ஒற்றுமை மேம்படும், தமிழர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதி, எனது இந்த மீம்ஸ் பாடலை நான் எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து எனது சிறிய முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் தன்னலம் கருதாத ஊடக நண்பர்கள், பெரியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த பாடலுக்கும் தங்கள் ஆதரவை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
குரு கல்யாண்
இசையமைப்பாளர்

Hello, Historically, it is well known fact that, apart from just entertainment musicians have reflected the pulse of the society and thereby improved unity amongst the people. Apart from working in Tamil films as a music director, I have been composing and releasing independent albums on varied social subjects for the past over 1 year. Couple of songs that I released this year “Manidha Manidha Ezhudhu Vaa” and “Zero is the Hero ” were received very well in social media. Continuing further, I have worked on a “#memesong” and released today.

“Memes” are not just a trivial internet phenomenon, they have created powerful social impacts on individuals and a generation. I see them as the “modern mimicry”. I was fascinated looking at the variety of memes such as “I.T memes, B.P.O, memes, Husband & Wife Memes”. They connect people beyond caste or age. They are very humorous at the same time thought provoking as well. Sometimes when there are fake news spread by a meme, even those get memed back and they become a trend. Memes are a very health growth and if they are further utilised well, it will help our society to stay united and grow rapidly towards the improvement as a whole. Thinking thus, I have written, composed and sung this #memesong and presenting it to you. I thank the media friends and elders, who have been so selflessly supporting my humble efforts and appreciating. I request your continued support to my latest #memesong as well. Thanking you for your kindness
Warm Regards,

Guru Kalyan
Music Director




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *