full screen background image
Search
Saturday 19 April 2025
  • :
  • :
Latest Update

​தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு !

தென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

new doc 2018-04-03 15.20.37

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *