full screen background image
Search
Friday 20 June 2025
  • :
  • :
Latest Update

ROCK ON STAR SINGS FOR ROCK STAR ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்

ROCK ON STAR SINGS FOR ROCK STAR

ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பாலிவுட் நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாட வைத்திருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார்.

இவரை பாடவைத்து அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் கேட்டபோது, ‘ஃபர்ஹான் அக்தரை மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய இசையில் வெளியான ஹிந்தி பாடல்களைப் பற்றி பேசினார். அதே போல் நானும் ‘ராக் ஆன் ’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்றும், உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். அத்துடன் நீங்கள் ஏன் தென்னிந்திய மொழிகளில் பாடக்கூடாது? என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு விருப்பம் இருந்தாலும் எனக்கு தென்னிந்திய மொழிகளான தெலுங்கோ, தமிழோ சுத்தமாக தெரியாதே..? என்று பதிலளித்தார். அத்துடன் உங்களுக்கு என்னுடைய குரலினிமை மீது நம்பிக்கை இருந்தால் நான் முயற்சி செய்கிறேன். நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீக்கிவிடுங்கள் என்றார். அப்போது நான் அவருக்கு மொழி உச்சரிப்பு ஆகியவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுடைய குரலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் அமைந்தால் நீங்கள் தான் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு சரியென்று ஒப்புக்கொண்டார்.

முதலில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தயாரான ‘1 நேநோக்கடுனே’ ( 1 Nenokkadine) என்ற படத்தில் இடம்பெற்ற ‘Who are you..’ என்ற பாடலைத்தான் ஃபர்ஹான் அக்தர் பாடுவதாகயிருந்தது. ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் அவரால் பாட இயலவில்லை. அதனையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ‘பாரத் அனே நேனு ’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘I Dont Know…’ எனத் தொடங்கும் பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அவரைத் தொடர்பு கொண்டேன். இந்த பாடலுக்கான மெட்டை நான் உருவாக்கும் போதே இந்த பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன். அவரைத் தொடர்பு கொண்ட போது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்த பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக் கொடுத்தார்.


இந்த பாடலை கேட்டவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. ஃபர்ஹான் அக்தர் எப்படி தெலுங்கு மொழியை கச்சிதமாக உச்சரித்து இனிமையாக பாடியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். இதுவே இந்த பாடலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த பாடலின் வெற்றிக்கு உதவிய நாயகன் மகேஷ் பாபு, இயக்குநர் கொரட்லா சிவா, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபர்ஹான் அக்தருடனான இந்த இசைப்பயணம் மேலும் தொடரும்’ என்றார்.

இதனிடையே பிரபலமான பாலிவுட் பாடகர்களான மில்கா சிங், அப்பச்சே இந்தியன், அட்னன் ஷமி, பாபா செகல்உள்ளிட்ட பல இசை கலைஞர்களை தென்னிந்திய மொழிகளில் பாட வைத்து, இங்கு அறிமுகப்படுத்திய பெருமையை தேவி ஸ்ரீபிரசாத்தையே சேரும் என்பதுகுறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *