full screen background image
Search
Friday 28 March 2025
  • :
  • :
Latest Update

protesting against the sterlite coppers plant by actor Prabha news in tamil

தொடர்ந்து சமூகப்பணி செய்து நற்பெயர் பெற்றுள்ள வளர்ந்து வரும் அறிமுக நடிகர் பிரபு இப்போது ஸ்டெரிலைட் போரட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்.

திருட்டு விசிடி மற்றும் மதுரை மாவட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரபா, ஸ்டெரிலைட் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை மாணவர்களுடன் இணைந்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்னம் ஸ்டேடியமில் உண்ணாவிரதப் போரட்டத்தில் கலந்துக்கொன்டார்

தமிழ்நாட்டில் ஸ்டெரிலைட் போராட்டம் பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. தூத்துக்குடி மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்காக போராடி வருகின்றனர். ஸ்டெரிலைட்டால் வருங்கால சந்த்ததியே கேன்சர், மற்றும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். 15 நாட்களுக்கு மேலாக ஸ்டெரிலைட் ஆலையை மூடச்சொல்லி பெருமளவில் மக்கள் பலவிதங்களில் போராடி வருகின்றனர். ஆனால் தமிழ்க அரசும், மத்திய அரசும், மக்களை கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகின்றது

இப்போது போரட்டம் பலவிதங்களில், பல இடங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முதல் ஆளாக இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்க்ளுடன் இணைந்து இன்று காலை உண்ணாவிரதப் போராட்டதில் இறங்கியுள்ளார் நடிகர் பிரபு. தமிழ் சினிமா உலகில் இருந்து இது வரை எவரும் இந்தப்போரட்டதிற்கு ஆதரவாய் இறங்காத நிலையில் புதுமுக நடிகராக இருந்தாலும் துணிந்து அரசுக்கெதிராக மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் நடிகர் பிரபு. மக்கள் மத்தியில் தங்களுக்கு ஆதரவாய் களமிறங்கிய பிரபுவிற்கு பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *