மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் “கத்துக்குட்டி”
நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார்.
படம் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்ற கத்துக்குட்டி திரைப்படம் மீண்டும் பட்டையை கிளப்ப மார்ச் 23ம் தேதி ரிலிசாகவுள்ளது.
படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.
“கத்துக்குட்டி” படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனமுவந்து பாராட்டியுள்ளனர்.
‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி’ என வைகோ, பாரதிராஜா கூறியுள்ளனர். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் ‘கத்துக்குட்டி’ என சீமான் மனம் திறந்த பாராட்டியுள்ளார். எண்ணற்ற பரிசுகளும் மரியாதைகளும் கத்துக்குட்டி படத்திற்க்கும் படத்தின் குழுவினருக்கும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் நாயகன் நரேன், முதன் முறையாக வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு காமெடியில் ரவுண்ட் கட்டியிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் சூரி, ‘ஜிஞ்சர்’ என்கிற பாத்திரத்தில், படம் முழுக்க காமெடி அதகளத்தையே நடத்தி இருக்கிறார்.
நடிப்பு: நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், காதல் சந்தியா, காதல் சரவணன், ராஜா, சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புதன் விஜய், கசாலி மற்றும் பலர்
இயக்கம்: இரா.சரவணன்
ஒளிப்பதிவு: சந்தோஷ் ஸ்ரீராம்
இசை: அருள்தேவ்
படத்தொகுப்பு: ராஜா சேதுபதி
மக்கள் தொடர்பு: நிகில்
பாடல்கள்: சினேகன், இரா.சரவணன், வசந்த் பாலகிருஷ்ணன்
ஆடை வடிவமைப்பு: சிவபாலன்
நடனம்: தம்பி சிவா
சண்டைப் பயிற்சி: பிரகாஷ்
தயாரிப்பு: அன்வர் கபீர், ராம்குமார், முருகன்