உண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்!
இணையத் திருட்டிற்கு சவால் விடும் “கிரிஷ்ணம்”!
பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் “கிரிஷ்ணம்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.
“கிரிஷ்ணம்” ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே இந்த “கிரிஷ்ணம்” திரைப்படம். உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே இட்டுச் செல்லும் பரபரப்பு மிக்க “கிரிஷ்ணம்” எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே ம்தல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது.
இந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Krishnam – A hero performing his own real life incident for the first time in the history of world cinema
Krishnam – A film against Online Piracy
Krishnam is a Tamil, Telugu & Malayalam trilingual film produced by P.N.Balram under his banner PNB Cinemas. Its story is an original experience of the hero Akshay Krishnan. Dinesh Baboo writes the screenplay, handles the camera & also directs this film. He already has a lot of experience as a cameraman in the Malayalam & Kannada film industry. The film is mainly focused on the human feelings & their basic lifestyle. Krishnam has Akshay Krishnan, Ashwaria Ullas, Mamitha Baiju, Saikumar, Renji Panicker and Shanthi Krishna in the lead roles. Lyrics are penned by Sandhya in the Music of Hari Prasad.
Krishnam has a very impressive story line. We experience a lot of unplanned things in our life which give us both happiness & fear. Such one is this film and it is based on an original story. Also this will leave the audience in edge of their seats.
Krishnam also has DRM (Digital Rights Management) technology in it. This one helps to prevent the online piracy of the films. The film’s crew is very proud of this technology.