full screen background image
Search
Saturday 12 October 2024
  • :
  • :

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை ‘பரதன் பிலிம்ஸ்’ தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை ‘பரதன் பிலிம்ஸ்’ தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.’பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

தொழில் நுட்பக்குழு :

இயக்கம் : சித்திக்
இசை : அம்ரேஷ்
ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்
எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர்
புரொடக்ஷன் டிசைன் : மணி சுசித்ரா
ஆர்ட் : ஜோசப் நெல்லிகன்
சண்டை பயிற்சி : பெப்சி விஜயன்
நடனம் : பிருந்தா
நிர்வாக தயாரிப்பு : விமல்.ஜி
தயாரிப்பு : எம்.ஹர்சினி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *