full screen background image
Search
Tuesday 16 April 2024
  • :
  • :

Thamizh Muttram 4th Year Kalai Thiruvizha

வேதாந்தம்ஜி தலைமையில் தமிழ்முற்றம்
மொரீஷியஸ் துணைக்குடியரசுத்தலைவர் வையாபுரி முன்னிலை
. தமிழ்முற்றம் நான்காம் ஆண்டுவிழா தமிழ் கலை மற்றும் பண்பாட்டுவிழா 03.03.2018 சனிக்கிழமை பிற்பகல் 2,30 மணியளவில் மேற்கு மாம்பலம் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல்தலைவர் மானனீய வேதாந்தம்ஜி தலைமையில் நடைபெற்றது
பேராசிரியை ராஜ ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். நாட்டிய மயூரி குமாரி ஹரிணி பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வரவேற்றாள். ஹிந்து வித்யாலயாக்களின் முதன்மை முதல்வர் டாக்டர் திருமதி. கிரிஜாசேஷாத்ரி குத்துவிளக்கேற்றினார். திருமிகு. செழியன் குமாரசாமி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார். திருமதி நிர்மலாரவி திருமுறைகளை பாடினார். புலவர் திருமதி வஸந்தா ஜெகதீசன் ஆண்டறிக்கை வாசித்தார்
தலைமை உரையில் மானனீய வேதாந்தம்ஜி அவர்கள் தமிழ்முற்றம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் எதிர்காலத்தில் பெற்றோர்கள் தன் மக்களால் கவனிக்கப் படமாட்டார்கள் என்ற செய்தியை மகாபாரதக் கதையின் மூலம் எடுத்துக்கூறினார். .
அடுத்துப் பேசிய டாக்டர். கிரிஜா சேஷாத்ரி அவர்கள் முன்பு ஐந்தாம் வகுப்புவரை தமிழில் மட்டுமே பாடங்கள் படித்தோம், .ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் அறிமுகமாயிற்று .இப்போது முதல் வகுப்பிலேயே ஆங்கிலம் பயிலத் தொடங்கிவிடுகிள்றனர் என்றார். மகாகவிக்குப் பின் தமிழில் கவிஞர்கள் தோன்றவில்லை என்றும் பேசினார். அடுத்து தமிழ்பண்பாட்டுக் கழக மலர் வெளியிடப்பட்டது. அடுத்து சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அடுத்து ஐ,ஏ,எஸ். செல்லமுத்து அவர்கள் தனது உரையில் தமிழ்நாட்டு சரித்திரத்தை எல்லா மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தமிழ் பண்பாட்டுக் கலாச்சார வளர்ச்சிக்குத் தேவையானதைச் செய்வதோடு தமிழின் மேன்மைக்காகவும் தமிழ்முற்றம் என்ற அமைப்பை மானனீய வேதாந்தம்ஜி ஏற்படுத்தினார் என்று கூறினார்.
அடுத்து பேசிய சிறப்பு அமைப்பாளர், மேதகு பரமசிவம்பிள்ளை வையாபுரி அவர்கள் மொரீஷியஸ் நாட்டில் வாரந்தோறும் பள்ளிகளில் வெள்ளிக்கிழமையன்று சரஸ்வதி பூஜை நடத்தப்படுகிறது, அப்போது விநாயகர், லெட்சுமி, சரஸ்வதி ,சிவன் பாடல்கள் பாடப்படுகின்றன என்றார்.
மொரீஷியஸ் நாட்டில் தமிழ் பண்பாட்டுக்கல்வியை வளர்க்க பயிற்சி நிறுவனங்கள் உள்ளன என்றார். கும்பகோணத்தில் பிறந்த கணிதமேதை ராமானுஜம் அவர்கள் பெயரில் போட்டிகள் நடத்துவதாகக் கூறினார். மகாசிவராத்திரி, பொங்கல், தீபாவளி போன்ற அனைத்துப் பண்டிகைகளும் கொண்டாடப்படுகிள்றன, திருப்புகழ், தேவாரம் திருவாசகம், பன்னிரு திருமுறைகளும் கோயில்களில் பாடப்டுகின்றன. தான் சிலப்பதிகாரத்தில் கோவலனாக நடித்தேன் என்றும் பெருமையுடன் கூறினார்.,

இயற்கையைப் பாதுகாப்பது போல் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது மிக அவசியமானது என்று பேசினார். அடுத்து தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பில் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதன்பின் நவீன விஞ்ஞானமும், வேதமும் என்ற தலைப்பில் ராஜ ராஜ தாஷா இஸ்கான் அவர்கள் உரையாற்றினார். தமிழ் முற்ற அமைப்பாளர் திரு. பொன்கி. பெருமாள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தாம்பரம் தேசிய மேல்நிலைப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் திரு. வெ. நடராஜன் நன்றியுரை வழங்கினார்

. பின்னர், தமிழ்முற்றம் அமைப்பினைச் சேர்ந்த பேச்சாளர்களில் திரு. நெல்லை சுப்பைய்யா, திருமதி நிர்மலாரவி ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணஜெயந்தி விழாக்கமிட்டி நிர்வாகிகள், திரு. துளசிராம். திரு. சுப்ரமணியம். புலவர் திரு. அய்யாபிள்ளை, ஓராசிரியர்பள்ளிகளின் திட்ட அமைப்பாளர் திரு ஜனார்த்தனம், குறட்செல்வர் திருமதி. ஆதிலிங்கம்பிச்சை ,விசுவஹிந்து பரிஷத் அலுவலகப்பொருப்பாளர்கள், திரு.ராஜேஸ்வரன் திரு,ஜி. சந்திரசேகரன், அலுவலகமேலாளர் திரு. கணபதி ராமசுப்பு ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா, ஜி,கே. ஷெட்டி ஹிந்துவித்யாலயா, தாம்பரம் வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர்கள், அலுவலக பொறுப்பாளர்கள், மாணவச் செல்வங்கள். கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் திரு.சோமசுந்தரம், விஸ்வஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர், திரு. மனோஜ் குமார், சேரகுளம் மாரியப்பன், நாகர்கோவில் எம்.எஸ்.மணி, சென்னை மாநகர அமைப்பாளர். திரு. கே.எல்.சத்தியமூர்த்தி, திரு.பாவேந்தன், ஓசூர் பிரபு அனைவரும் கலந்துகொண்டனர்,
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *