full screen background image
Search
Thursday 12 December 2024
  • :
  • :
Latest Update

Dubbing Union Press Meet News

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராம ராஜ்யம் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டிடும் ரோகினி பேசியது !!

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் எனக்கு தெரிந்து இதயத்தை திருடாதே என்ற படத்தின் மூலமாக நான் பின்னணி குரல் கொடுத்து வருகின்றேன். இதுவரை இந்த சங்கத்தில் எந்த பதவிக்கும் தேர்தல் நடந்தது கிடையாது நானும் எண்ணியது இல்லை ஆனால் இன்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. நான் வெளியில் சென்று பார்க்கும்போது விவசாய பிரச்சினைகள் உட்பட எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்கும் நான் என்னுடைய துறையில் நடக்கும் பிரச்சினையை நான் கவனிக்கவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்பதை நான் உணர்கிறேன். முதலில் நான் மூத்தவர்கள் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் நான் மற்ற வேலைகளை கவனித்துவந்தேன். ஆனால் மெல்ல மெல்ல முறைகேடுகள் நடைபெறுவதும் , உழல் நடைபெறுவதும் இன்னும் நிறைய பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருப்பதை பார்த்ததும் முதலில் இந்த பிரச்சினையை தான் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த ஒரு மாத காலமாக சங்கத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு நானும் பொறுப்புக்கு வரேன் அனைவரும் ஓன்றாக பணியாற்றலாம் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வீடு வீடாக சென்று அவர்களை பார்த்த போது அவர்கள் அனைவரும் கூறிய ஓரே விஷயம் என்னவென்றால் நங்கள் டப்பிங் பேசியே ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதாக கூறினார்கள். பாலன் என்ற ஒரு உறுப்பினர் அவர் இறந்த பின்பு அவருடைய உறப்பினர் அட்டையை கொண்டுவந்து அவருடைய இறுதி சடங்கிற்கு தேவையான பணத்தை கேட்டதற்கு மதிக்கவே இல்லை என்றும் ஏனோ தானோ என்று 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறினர். இவ்வாறு பல நிகழ்வுகள் கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது இந்த நிலை மாறவேண்டும் என்றால் இந்த தேர்தலில் இவர்களுடன் கைகோர்த்து நிற்கவேண்டும். இந்த தேர்தலில் நான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன். 34 வருடங்களில் இவர்கள் உறுபினர்களுக்கு ஓய்வூதியம் பணம் , கல்வி உதவி தொகை என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு வேலை இல்லை என்பதை நான் ஓரு கலைஞராக உணர முடிகிறது. டப்பிங் கலைஞர்கள் அனைவர்க்கும் ஓரு சுழற்சி முறையில் வேலைகள் வர ஏற்பாடுகள் செய்யபட வேண்டும். இந்த முறைகேடுகளை எல்லா உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனபது தான் இந்த நிகழ்வு. இன்னும் 2 நாட்கள் மட்டும்தான் உள்ளது அணைத்து உறுப்பினர்களும் வந்து வாக்களிக்க வேண்டும். இனி ஒரு மாற்றம் வேண்டும் வேண்டும் அந்த மாற்றத்தினால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வந்து எங்கள் அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராம ராஜ்ய அணி சார்பில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தாசரதி பேசியது !!


திரையில் நடிக்கும் அணைத்து நடிகர், நடிகைகளுக்கு உயிர் கொடுக்கும் அதாவது குரல் கொடுக்கும் கலையில் இடுபட்டுள்ள உறுபினர்களை கொண்டுள்ள சங்கம் எங்கள் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். அணைத்து நடிகர்களுக்கும் குரல் கொடுக்கும் எங்களுக்கு நங்கள் சொந்த வாழ்வுரிமையை மீட்கவும் அதை பாதுகாக்கவும் குரல் எழுப்ப முடியாமல் தவித்த நிலையில் இன்று வணக்கத்திற்குரிய திரு. G.V. ரத்னகுமார் அவர்களின் பெரும் முயற்சியில் உயர்நீதிமன்றத்தின் மேர் பார்வையில் ஒரு நியமான தேர்தலை நோக்கி எங்கள் சங்கம் முன்னேறி செல்கிறது. 1983-ல் பதிவு செய்யப்பட்டது தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். அதில் இருந்து பல கட்ட வளர்ச்சிகளையும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளையும் எங்கள் சங்கம் பார்த்துள்ளது . திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை தவிர FEFSI கூட்டமைப்பில் உள்ள 23 சங்கங்களில் எங்கள் சங்கமும் ஒன்று. இதில் மற்ற 22 சங்கங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் எங்கள் சங்கத்தின் வளர்ச்சியை ஓப்பிட்டு பார்க்கும்போது மிகவும் பின்தங்கியே உள்ளோம் இதுவே உண்மை. காரணம் என்னவென்றால் மிகவும் பிரபலமான நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தால் மட்டுமே இந்த சங்கம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற மாயையை 3 தலைமுறைகளாக நம்பவைத்ததுள்ளனர். அதை இந்த தலைமுறையிலாவது அதை உடைக்கவேண்டும் எனபது தான் இந்த போராட்டம். மற்ற எல்லா சங்கத்திலும் பெருவாரியாக உறுப்பினர்களுக்கு காப்பீடும் , ஓய்வூதிய திட்டங்கள் , ஓய்வுபெறும் பயன் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சங்கத்தில் உறப்பினராக உள்ள ஒருவர் அவருடைய உறுப்பினர் அட்டையை கொண்டுவந்து சங்கத்திடம் ஒப்படைத்து ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு தகுந்த மரியாதையை செலுத்தி விழா அமைத்து சங்கத்தில் உள்ள அணைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி கைதட்டி உற்சாகபடுத்தி அவர் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தி அவருக்கு ஓய்வு தொகையாக ஒரு குறுப்பிட்ட தொகையை வழங்கி அவருடைய வாழ்வுரிமையை பாதிக்காத அளவில் பணிகளை செய்கின்றது. டப்பிங் கலைஞர்கள் சங்கதை பொறுத்தவரை இந்த மாதிரியான செயல்கள் நடைமுறையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லாமல் போனதிற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் அதற்கு காரணமாக இருந்தது சிலபல முறைகேடுகள் அந்த முறைகேடுகளை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடமுடியும். இருந்தாலும் அதில் உள்ள ஒரு சில முறைகேடுகளை தான் உங்கள் பார்வைக்கு கொண்டுவந்துள்ளோம் உங்கள் மூலமாக எங்கள் அணைத்து உறுபினர்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் எனபது முக்கியம். இந்த மாதிரியான முறைகேடுகள் வேறுஎங்கும் நடக்காமல் தடுக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம். டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கல்வி உதவித்தொகையில் முறைகேடு , சம்பளம் பிடித்தலில் முறைகேடு , மருத்துவ உதவி தொகையில் முறைகேடு , இதுமட்டுமல்லாமல் நல்உள்ளம் படைத்த சில கல்லூரிகள் வருடா வருடம் வழங்கும் குறுப்பிட்ட இலவச கல்லுரி சீட்டுகள் வரைக்கும் இவர்களின் முறைகேடுகள் நிகழ்கின்றன. சில முறைகேட்டை உறுபினர்கள் தட்டிகேட்டனர் ஆனால் அவர்கள் அனைவரும் அடக்கமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகினார்கள். சிலர் சங்க நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் சங்க விரோதிகள் என்கிற முத்திரையுடன் இந்த மாதிரியான செயல்களில் தொடந்து இடுபட்டு வருவதால் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ” ராம ராஜ்யம் ” அணியாக சந்திக்கவுள்ளோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *