சமூக அக்கறையில் ஈடுபடும் புதுமுக நடிகர் பிரபா
திருட்டு V C D மற்றும் மதுரை மாவட்டம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபா அது மட்டும் இல்லாமல் சமூக பொது நலன் விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த வருடம் மே மாதம் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற மாணவன் வீட்டில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்தான் விழுந்ததில் அவனது முதுகெலும்பு முழுவதும் உடைந்து அவனது படிப்பு பாதியில் நின்றது. அவனது தந்தை வேலு ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டித்தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். படிப்பில் திறமையான தனது மகன் விபத்து ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக அவன் பள்ளி படிப்பை தொடர முடியாத இருந்த நிலையில்.இதை தன் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட நடிகர் பிரபா நேரில் சென்று அவரை சந்தித்து அவருடைய மொத்த படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி ராஜேஷுடைய தம்பி அஜய் foodball விளையாட்டு வீரர் என்று கூறியது அவர்க்கு தேவையா விளையாட்டு சமந்தப்பட்ட பொருள்களையும் வாங்குவதற்காக ஒரு தொகையை அளித்தார். அது மட்டும் அல்லது தங்களுக்கு வேறு ஏதும் உதவி தேவைப்பட்டால் என்னுடைய தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார்.
சமூக அக்கறையுடன் இயங்கி வளர்ந்து வரும் நடிகர் பிரபாவின் இந்தச்செயலை அக்கம்பக்கத்தினர் அனைவரும் பாராட்டினர்.
ஆட்டோ ஓட்டுநர் தன் குடும்பத்தின் விளக்கொளி நடிகர் பிரபாவால் ஏற்றிவைப்பட்டிருக்கிறது என்றார்.
பிரபாவிடம் கேட்டபோது இவர் மட்டும் இண்ட்ரி வேறு எவரேனும் உதவி என்று கூறினால் நான் உதவ தயாராக இருக்கிறேன் என்று கூறினார்