3வது வாரத்தில் அடியெடுத்து வைத்த ‘மன்னர் வகையறா’; உற்சாகத்தில் விமல்..!
‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்…!
காத்திருப்பு வீண்போகவில்லை; மகிழ்ச்சியில் விமல்!
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருந்த இந்தப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதுமட்டுமல்ல ஒரு படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்துவிடுகிற இந்த கடினமான சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக்கொண்டு இருப்பதே இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான சான்று. இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் விமல்
“இந்தப்படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும், அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்” என்று சொல்லி இந்தப்படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்… அவரது காத்திருப்பு வீண்போகவில்லை..
ஆம்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.. ‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.
இதுதவிர சற்குணம் டைரக்சனில் ‘K2’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது. ஆக இந்த வருடம் அடுத்தடுத்து விமலின் படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விமல்..?